ம. வே. பசுபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ம. வே. பசுபதி
ம. வே. பசுபதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ம. வே. பசுபதி
பிறப்புபெயர் ம. வே. பசுபதி
பிறந்ததிகதி (1942-08-21)21 ஆகத்து 1942
பிறந்தஇடம் திருப்பனந்தாள், கும்பகோணம், தமிழ்நாடு
இறப்பு சனவரி 31, 2022(2022-01-31) (அகவை 79)
பணி எழுத்தாளர்
தேசியம் தமிழர்
அறியப்படுவது தமிழறிஞர், எழுத்தாளர்
பெற்றோர் கா. ம. வேங்கடராமையா, அன்னபூரணி அம்மாள்

ம. வே. பசுபதி (Ma.Ve.Pasupathi, 21 ஆகத்து 1942 – 31 சனவரி 2022) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாள் எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கா. ம. வேங்கடராமையா, அன்னபூரணி அம்மாள் திருப்பனந்தாளிலுள்ள காசி மடம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம், முதுகலைப் பட்டம் படித்து, அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி அக்கல்லூரியின் முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர். 2000 ஆம் ஆண்டில் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் சென்னை, பெசண்ட் நகரிலுள்ள உ. வே. சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது. இவர் பதிப்புகள், உரைநடை நூல்கள் என்று இதுவரைக்கும் 50இக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளார். கம்பன் கதை எனும் நூலினையும் எழுதியவர்.

இலக்கியப் பணி

ம.வே.பசுபதி ஓலைச்சுவடிகளிலிருந்து 23 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 15 சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார். பழந்தமிழ் நூல்களை மூலங்களுடன் ஒப்பிட்டு, பாடபேதம் நோக்கிப் பதிப்பிப்பதில் நிபுணர் என அறியப்பட்டார்

உ.வே.சா நூலகப் பணிகள்

உ.வே.சா நூலகத்தில் பணியில் இருக்கையில் டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் உரைநடை நூல்களைப் பதிப்பித்து நான்கு பகுதிகளாக வெளியிட்டார். பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் தீவீரமாகச் செயல்பட்டார். அதில் பணவிடுதூது தொடர்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக இருக்கிறது.

செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்னும் தலைப்பில் தமிழின் தொன்மையான இலக்கண இலக்கிய நூல்களை நாற்பத்தொரு தொகுதிகளாக வெளியிட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டித் தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்புப் பதிப்பு பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடி மூலங்களுடன் விரிவாக ஒப்பிட்டு முறையான பாடவேறுபாட்டுக்குறிகளுடன் வெளிவந்துள்ள மாபெரும் ஆய்வுத் தொகை. சென்ற ஐம்பதாண்டுகளில் நிகழ்ந்த முதன்மையான ஆய்வுப்பணியாக இது கருதப்படுகிறது. இப்பதிப்பில் பழந்தமிழிலக்கியங்கள் முறையாகப் பதப்பிரிப்பு செய்யப்பட்டிருந்தன.

இதழியல்

பசுபதி திருப்பனந்தாள் மடம் வெளியிட்ட குமரகுருபரர் என்னும் சைவ இலக்கிய மாத இதழின் ஆசிரியராகப் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

சொற்பொழிவு

ம.வே.பசுபதி புகழ்பெற்ற இலக்கிய சொற்பொழிவாளர். தமிழ் பக்தி இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து ஏராளமான உரைகளை ஆற்றியிருக்கிறார்

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் திரு.வி.க.வின் மேடைத் தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொலைக்காட்சிகளில் அவரது பல உரைகள் ஒளிபரப்பாகியிருக்கின்றன.

இலக்கியச் செயல்பாடுகள்

தனது தந்தையார் கல்வெட்டாரய்ச்சியாளர் மற்றும் தமிழறிஞராகிய கா.ம. வேங்கடராமையா வின் வலைத்தளத்தை உருவாக்கி நிர்வகித்தார். தேசியசிந்தனைக் கழகம் என்னும் கலாச்சார அமைப்பின் மாநிலத்தலைவராக பணியாற்றினார்.

விருதுகள்

அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்மைக்காக 2013 -ஆம் ஆண்டு தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்றார்.

இறப்பு

ம.வே.பசுபதி ஜனவரி 29,2022 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் காலமானார்.

இலக்கிய இடம்

ம.வே.பசுபதி தமிழ்ப் பதிப்பியக்கத்தின் பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் முன்னர் பார்வைக்கு வராத பல்லாயிரம் ஏட்டுச்சுவடிகளை தொகுத்து, உரியவற்றை தேர்வுசெய்து, ஏற்கனவே வெளிவந்த பதிப்புகளின் பாடபேதங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவர் 'செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்' 21 ஆம் நூற்றாண்டு தமிழ் பதிப்பியக்கத்தின் முதன்மைச் சாதனை.

படைப்புகள்

  • பெயரகராதி
  • நீதி நூல்கள் விளக்கவுரை
  • கவிஞனின் சுவைநயம்
  • பாவேந்தரின் பாநயம்
  • கம்ப சிகரங்கள்
  • புதிய திருவள்ளுவமாலை
  • அகராதி நிகண்டு
  • விசேடன விளக்கம்
  • மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது
  • பண விடு தூது( 3 நூல்கள்)
  • மூவருலா
  • பாடு மொழிப் பதினெட்டு
  • திருப்புடை மருதூர் புராணம்
  • ஒருத்துறைக் கோவை இரண்டு
  • யாப்பருங்கலக் காரிகை புத்துரை
  • சுபத்திரை கல்யாணம்
  • உமையம்மை திருப்புகழ்
  • சண்முகப் பாட்டியல் பொருத்த வினா விடை
  • கிருஷ்ண லீலை
  • கற்பகவல்லி நாயகி மாலை

விருது

இவர் தமிழ்நாடு அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான உ. வே. சா. விருது பெற்றிருக்கிறார்.

மறைவு

இவர் 2022 சனவரி 31 அன்று உடல்நலக் குறைவால் சென்னை வில்லிவாக்கத்தில் இயற்கை எய்தினார்.[1]


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ம._வே._பசுபதி&oldid=5248" இருந்து மீள்விக்கப்பட்டது