போகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
போகன்
இயக்கம்லட்சுமன்
தயாரிப்புபிரபுதேவா
ஐசரி கே. கணேஷ்
கதைலட்சுமன்
கே. சந்துரு
இசைடி. இமான்
நடிப்புஜெயம் ரவி
அரவிந்த்சாமி
ஹன்சிகா மோட்வானி
அக்சரா கௌடா
வருண்
ஒளிப்பதிவுசௌந்தரராஜன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்பிரபுதேவா ஸ்டூடியோஸ்
விநியோகம்சிறீ கிறீன் புரடக்சன்சு
வெளியீடு2 பெப்ரவரி 2017
ஓட்டம்150 நிமி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்16 கோடி (US$2.0 மில்லியன்)

போகன் (Bogan) 2017 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் செயம் ரவி, அரவிந்த் சாமி, அன்சிகா மோட்வானி, நாசர், பொன்வண்ணன் போன்றோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். லட்சுமன் இயக்கியுள்ளார்.[1] பிரபுதேவா தயாரித்துள்ளார்.

கதைச் சுருக்கம்

நகைக் கடை, வங்கி என்று அடுத்தடுத்து பெரிய அளவில் இரண்டு பணக் கொள்ளைகள் நடக்கின்றன. இரண்டு கொள்ளைகளையும் அதே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் செய்த தாக அங்கே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிறது. அப்படிச் சிக்குபவர்களில் ஒருவர் நரேன். அவரது மகன் உதவி ஆணையர் விக்ரம் (ஜெயம் ரவி). தன் அப்பாவின் மீது படிந்த கறையைப் போக்க அவர் களம் இறங்குகிறார். ரவி மேற்கொள்ளும் துப்பறியும் முயற்சியில் ஆதித்யா (அரவிந்த் சாமி) சிக்குகிறார்.

கொள்ளைகளின் சூத்திரதாரி அரவிந்த் சாமிதான் என்று தெரிந்தாலும் அவர் அதை எப்படிச் செய்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க முனையும் ரவியிடம் தன் ரகசிய சக்தியைப் பிரயோகிக்கிறார் அரவிந்த் சாமி. இதனால் ரவியின் வாழ்க்கை அடியோடு மாற, அடுத்தடுத்துப் பல விபரீதங்கள் அரங்கேறுகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=போகன்&oldid=36047" இருந்து மீள்விக்கப்பட்டது