பொ. சந்தியாகு
Jump to navigation
Jump to search
பொ. சந்தியாகு (பிறப்பு: பிப்ரவரி 10 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். ஆசிரியர் சங்கங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களிலும் ஈடுபாடு உடையவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
- மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைப் போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார்.
- தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் நடத்திய போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார்.
- "கூட்டுறவுச் செம்மல்" கெடா மாநில இந்தியப் பள்ளிகளின் கூட்டுறவுக் கழகம் விருது (2001)
- PJK விருது - மலேசியா அரசாங்கம்