பெ. நாராயணசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெ. நாராயணசாமி (பிறப்பு: பிப்ரவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். முதல்வன், ஞானமணி, சக்திவடிவேலன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் ஒரு சிறந்த மேடை நாடகப் பயிற்றுநரும், நல்ல காற்பந்தாட்டக்காரருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "முதல் ஓசை" (கவிதைத் தொகுப்பு, 1991)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெ._நாராயணசாமி&oldid=6345" இருந்து மீள்விக்கப்பட்டது