பெ. கோவிந்தன்
Jump to navigation
Jump to search
பெ. கோவிந்தன் (பிறப்பு: மே 3 1940) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பெ. கோ. மலையரசன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இவர் விற்பனை உதவியாலாளராக பணியாற்றி வருகின்றார். நாடறிந்த நல்ல கவிஞர். பல வானொலி, மேடைக் கவியரங்குகளில் பங்கு பற்றியுமுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960-ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைகள், கட்டுரைகளை எழுதிவருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும், தமிழ் நாட்டில் "தென்மொழி", "முல்லைச்சரம்" முதலிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நூல்கள்
- "நிலைபெற்ற தலைவன்" (அண்ணா பற்றிய கவிதைகள், 1969)
- "பாவாணர் பிள்ளைத் தமிழ்" (1989)
- "பாய்புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்" (2003)
பரிசுகளும் விருதுகளும்
- சிங்கப்பூரில் நடந்த தென்கிழக்காசியக் கவிதை மஞ்சரி கவிதைப் போட்டியில் முதல் பரிசு (1988);
- பாரதிதாசன் இயக்கத்தின் குறுங்காவியப் போட்டியில் இரண்டாம் பரிசு (1989);
- அன்பானந்தன் இலக்கிய வாரியம், தமிழர் திருநாள் அமைப்புக்கள் போன்றவற்றில் பல பரிசுகள்.
- "கழகக் கவிஞர்"விருது - மலேசியத் திராவிடர் கழகம்