பூவுக்குள் பூகம்பம்
பூவுக்குள் பூகம்பம் | |
---|---|
இயக்கம் | தியாகராஜன் |
தயாரிப்பு | தியாகராஜன் |
கதை | தியாகராஜன் |
இசை | சங்கீதராஜன் |
நடிப்பு | தியாகராஜன் பார்வதி |
கலையகம் | இலட்சுமி சாந்தி மூவிஸ்[1] |
வெளியீடு | 13 ஏப்ரல் 1988[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூவுக்குள் பூகம்பம் (Poovukkul Boogambam) என்பது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். தியாகராஜன் எழுதி இயக்கி தயாரித்த இப்படத்தின் வழியாக அவர் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தியாகராஜன், பார்வதி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும், சரோஜாதேவி, சரண்ராஜ் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்தர். படத்திற்கு சங்கீராஜன் இசையமைத்தார். இந்த படம் 13 ஏப்ரல் 1988 அன்று வெளியானது.
நடிகர்கள்
தயாரிப்பு
தியாகராஜன் தயாரிது, இயக்குனராக அறிமுகமான இப்படத்தில். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.[3]
இசை
இப்படத்திற்கு சங்கீதராஜனால் இசை அமைக்கப்பட்டது.[4]
- தாலி செய்யட்டுமா - எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
- அன்பே ஒரு ஆசை - எஸ். பி. பாலசுப்ரமண்யம்
- நாடு அதை - எஸ். பி. பாலசுப்ரமண்யம்
- ஒரு காலம் - கே. ஜே. யேசுதாஸ்
- நாலும் நாலும் - உமா ரமணன்
வெளியீடு
பூவுக்குள் பூகம்பம் 13 ஏப்ரல் 1988 அன்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 15, 1988 தேதியிட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி, படத்தின் சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் தியாகராஜனே பொறுப்பு என எழுதினார். மேலும் திரைக்கதை குறித்து "மிகவும் தெளிவாக இல்லை" என்றும் குறிப்பிட்டார். படத்தின் இசை மற்றும் படப்பிடிப்பை விமர்சகர் பாராட்டினார்.[3]
குறிப்புகள்
- ↑ "List of Tamil Films Released In 1988-Producers" இம் மூலத்தில் இருந்து 31 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110531013440/http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/1988.asp.
- ↑ "பூவுக்குள் பூகம்பம்" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 2019-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190805092846/http://vellitthirai.com/movie/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/.
- ↑ 3.0 3.1 3.2 Krishnaswamy, N. (5 April 1988). "Poovukkul Boogambam". இந்தியன் எக்சுபிரசு: p. 5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880415&printsec=frontpage&hl=en.
- ↑ "Poovukkul Bhoogambam (1988)". https://www.raaga.com/tamil/movie/Poovukkul-Bhoogambam-songs-T0003222.