பரணர் திருவள்ளுவமாலைப் பாடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவள்ளுவமாலை என்னும் நூல் திருவள்ளுவரின் பெருமைகளையும், திருக்குறளின் பகுப்பமைதிகளையும் போற்றிக் கூறும் ஒரு தொகுப்பு நூல், இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் எனக் காட்டப்பட்டுள்ளது.

1050 ஆம் ஆண்டி வாக்கில் ஒரு புலவர் திருவள்ளுவமாலை பாடிப் பல புலவர் பெயரில் பாடல்கள் அடைவாக்கப்பட்டுள்ளன.[1]

பரணர் பெயரில் அடைவாக்கப்பட்டுள்ள பாடல்

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

பாடல் சொல்லும் செய்தி

திருமால் குறளன் (வாமணன்) உருவில் தோன்றி மூவுலகின் நிலப்பரப்பை இரண்டு தப்படிகளால் அளந்தான். திருவள்ளுவரோ அதே இரண்டு, ஆனால் பாடல் அடிகளால் (முப்பாலால்) உலகத்தாரின் உள்ளங்களை யெல்லாம் அளந்தான்.
  • 10 அவதாரக் கதைச் செய்தி

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005