பப்பி
பப்பி | |
---|---|
இயக்கம் | நட்டு தேவ் |
தயாரிப்பு | ஐசரி கணேஷ் |
கதை | நட்டு தேவ் |
இசை | தரண் குமார் |
நடிப்பு | வருண் சம்யுக்தா எக்டே யோகி பாபு |
ஒளிப்பதிவு | தீபக் குபார் பாண்டி |
படத்தொகுப்பு | ரிச்சி |
கலையகம் | வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் |
வெளியீடு | 11 அக்டோபர் 2019 |
ஓட்டம் | 104 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பப்பி (Puppy) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை அறிமுக இயக்கநரான நட்டு தேவ் (முரட்டு சிங்கிள் என குறிப்பிடப்பட்டுள்ளது) எழுதி இயக்கியுள்ளார். படத்தில் முன்னணி நடிகராக வருண் அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்யுக்தா எக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ஐசரி கணேஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் கீழ் தயாரித்தார். இப்படத்திற்கான இசையை தரண் குமார் அமைத்தார். இந்த படம் திரையரங்குகளில் 11 அக்டோபர் 2019 அன்று வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2]
கதை
கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் பிரபு ( வருண் ) தான் கன்னிப் பையன் என்ற நிலையிலிருந்து மாறவேண்டும் என்ற வலுவான ஆசையோடு உள்ளான். அவனது மூத்த மாணவன் ( யோகி பாபு ) அவனுக்கு வழிகாட்டுகிறான். பிரபு தனது வகுப்பு தோழி ரம்யாவை ( சம்யுக்தா எக்டே ) காதலிக்கிறான். அவனும் ரம்யாவும் திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் ஈடுபடும்போது அவனது பாலியல் ஆர்வம் அவனை சிக்கலில் ஆழ்த்துகிறது. அதாவது ரம்யா கர்ப்பமடைகிறாள். இதை அறிந்ததும் அவன் மிகவும் அதிர்ச்சியடைகிறான். கருவை கலைக்குமாறு ரம்யாவிடம் கூற அவள் அதற்கு மறுக்கிறாள். இது இருவரையும் கவலையடையச் செய்கிறது. அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு சரிசெய்கிறார்கள் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
நடிகர்கள்
- வருண் பிரபுவாக
- சம்யுக்தா எக்டே ரம்யாவாக
- யோகி பாபு மூத்த மாணவராக
- ராஜேந்திரன்
- ஜி. மாரிமுத்து பிரபுவின் தந்தையாக
- நித்தியா ரவீந்திரன் பிரபுவின் தாயாக
- அன்பரசன்
- ரிஷா
- ஆர். எஸ். சிவாஜி மருத்துவராக
- டைகர் தங்கதுரை
- சம்பத் ராம்
- டி. எஸ். ஆர் சிறப்பு தோற்றத்தில்
இசை
எண். | தலைப்பு | பாடகர் (கள்) | நீளம் (நிமிடங்கள்) | பாடல் வரிகள் |
---|---|---|---|---|
1 | "அஞ்சி மணிக்கு" | யுவன் சங்கர் ராஜா, சாஷா திருப்பதி | 05:16 | மிர்ச்சி விஜய் |
2 | "என் கை எனக்கு" | தரண் குமார், சாண்டி | 03:30 | |
3 | "சோத்துமூட்டை" | தரண் குமார், ஆர். ஜே. பாலாஜி | 04:01 | |
4 | "சூப்பர் ஸ்டார்" | அனிருத் ரவிச்சந்திரன், எம். சி. டி, தரண் குமார் | 03:49 | |
5 | "உயிரே வா" | கௌதம் மேனன், தரண் குமார், அலிஷா தாமஸ் | 04:58 | |
6 | "யோகி பாபு" (தீம்) | எம்.சி.டி, தரண் குமார் | 01:51 |