பன்னம்பாறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பன்னம்பாறை (Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.அதிக அளவிலான கோவில்களின் இருப்பிடமாக திகழ்வதால் பன்னம்பாறை கோவில் நகரம் என புனைப்பெயர் சூடி அழைக்கப்படுகிறது.

பன்னம்பாறை நில அமைப்பு

  • இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர்.
  • அழகிய நீரோடைகள் மற்றும் குளங்களைக் கொண்டுள்ளது.

இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2615 ஆகும். இவர்களில் பெண்கள் 1405 பேரும் ஆண்கள் 1210 பேரும் உள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் மற்றும் சமூகம்

இங்கு தேவர் மற்றும் கோனார் விஸ்வகர்ம பிள்ளைமார் பறையர் புதிரை வண்ணார் என்ற சாதிகளை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.அதிக அளவு மக்கள் தொகை பறையர் சமூகத்தவர் இடையர் சமூகத்தினர் உள்ளனர்.

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன)
  2. பன்னம்பாறை (வேதகோவில் தெரு / அழகேசன் தெரு / அம்பேத்கர் தெரு / இந்திரா காலனி)
  3. வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை
  4. புதுக்கிணறு பன்னம்பாறை
  5. வடக்கு பன்னம்பாறை
  6. தெற்கு பன்னம்பாறை
  7. நகனை பன்னம்பாறை
  8. வடலிவிளை பன்னம்பாறை

பனம்பாரனார்

தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்த புலவர் பனம்பாரனார் ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.[1] [2]

மேற்கோள்கள்

  1. "பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.
  2. இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  5. http://www.assembly.tn.gov.in/partywise.pdf
  6. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7.  Invalid |dead-url=dead (உதவி)
  8. இங்கு மேலே தாவவும்:8.0 8.1 8.2
  9.  Unknown parameter |accessyear= ignored (உதவி); Invalid |dead-url=live (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  10. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://tamilar.wiki/index.php?title=பன்னம்பாறை&oldid=88608" இருந்து மீள்விக்கப்பட்டது