பனிப்புலம்
பனிப்புலம் அல்லது பணிப்புலம் என்பது, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஒரு ஊர்.[1][2] இவ்வூர் சில்லாலை, மாதகல் ஆகிய ஊர்களை வடக்கு எல்லையாகவும்; வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, சில்லாலை என்னும் ஊர்களைக் கிழக்கு எல்லையாகவும்; பண்ணாகத்தைத் தெற்கு எல்லையாகவும்; சுழிபுரத்தையும், பறாளாயையும் மேற்கு எல்லையாகவும் கொண்ட ஒரு கிராம அலுவலகர் பிரிவு கிராமமாகும். இக்கிராம அலுவலர் பிரிவிற்குள் காலையடி, செருக்கற்புலம், செட்டியகுறிச்சி, சாந்தை எனும் ஊர்களும் அடங்கியுள்ளது.
நிறுவனங்கள்
இங்கே முத்துமாரி அம்மன் கோயில், காலையடி ஞானவேலாயுதர் கோயில், சாந்தை சித்திவிநாயகர் கோயில், சம்புநாதீஸ்வரர் கோயில், கண்ணகி கோயில் என்பன உள்ளன. இவைதவிரப் பல்வேறு கடவுளருக்கான சிறிய கோயில்களையும் இங்கே காணலாம். இவ்வூரில் பண்ணாகம் வடக்கு (காலையடி) அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சாந்தை சிற்றம்பல வித்தியாலயம், சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம் என்னும் பாடசாலைகள் உள்ளன. பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம், பணிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம், காலையடி மறுமலர்ச்சி மன்றம் எனும் அமைப்புகள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.
- ↑ "Uyarap-pulam, Koḻuntup-pulavu, Kēppā-pilavu, Koṟ-pulō". TamilNet. May 4, 2013. https://tamilnet.com/art.html?catid=98&artid=36278.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
- பணிப்புலம் மக்களும் வாழ்க்கை வரலாறும் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் - பணிப்புலம் இணையத்தளம்