பட்டினத்தார் (1962 திரைப்படம்)
பட்டினத்தார் | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | ஜே. ஆர். புரொடக்சன்ஸ் |
கதை | திரைக்கதை: கே. சோமு |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | டி. எம். சௌந்தரராஜன் ஜெமினி கே. சந்திரா எம். ஆர். ராதா செருக்களத்தூர் சாமா |
ஒளிப்பதிவு | ஆர். சிட்டிபாபு |
படத்தொகுப்பு | இ. தர்மலிங்கம் |
வெளியீடு | 1962 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டினத்தார் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், ஜெமினி கே. சந்திரா, எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் திரைக்கதையைக் கே. சோமுவும், வசனங்களைத் தஞ்சை இராமையாதாஸ், எழுத்தாளர் அகிலன் ஆகியோரும் எழுதினர்.[1] டி. எம். சௌந்தரராஜன் பாடல்களைப் பாடியிருந்தார். டி. கே. சுந்தர வாத்தியார், தஞ்சை ராமையாதாஸ், கு. மா. பாலசுப்பிரமணியம், அ. மருதகாசி, மற்றும் பட்டினத்தார் பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். டி. எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், பி. சுசீலா, பி. லீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.
11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் எனும் புலவரின் வரலாற்றை ஒட்டிய இத்திரைப்படத்தில் பட்டினத்தாராக டி. எம். சௌந்தரராஜனும், பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக ஜெமினி கே. சந்திராவும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். திரைப்படத்தில் பட்டினத்தார் பாடல்கள் பல இடம் பெற்றன. ஏனைய பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார், தஞ்சை ராமையாதாஸ், அ. மருதகாசி, கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இயற்றியிருந்தனர். பட்டினத்தாராக நடித்த பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பெரும்பாலான பாடல்களைப் பாடினார். பி. லீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, திருச்சி லோகநாதன், பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண் | பாடல் | பாடகர்/கள் | கால அளவு | பாடலாசிரியர் |
---|---|---|---|---|
1 | திருவெண்காடா திருவெண்காடா | திருச்சி லோகநாதன் | டி. கே. சுந்தர வாத்தியார் | |
2 | நிலவே நீ இந்த (இராகம்: லலித பஞ்சமம்) |
டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா | 3:29 | |
3 | தாயும் நீ | டி. எம். சௌந்தரராஜன் | 3:20 | |
4 | பக்தி கொண்டாடுவோம் | 3:04 | ||
5 | காப்பதுன் பாரம் ஐயா | 1:00 | ||
6 | முறையோ நீதியோ | 2:43 | ||
7 | என் செயலாவது | 2:54 | பட்டினத்தார் | |
8 | ஐயிரண்டு திங்கள் | 3:01 | ||
9 | முன்னை இட்ட தீ | 0:59 | ||
10 | ஓன்றென்றிரு | 3:23 | ||
11 | வாளால் மகவரிந்து | 2:51 | ||
12 | ஒரு மட மாது | 4:56 | ||
13 | கண்ணிருந்தும் | 2:40 | அ. மருதகாசி | |
14 | தங்க பொம்மை | சூலமங்கலம் ராஜலட்சுமி | 4:16 | கு. மா. பாலசுப்பிரமணியம் |
15 | வக்கணை பேசுவதில் | பி. சுசீலா | 3:16 | தஞ்சை ராமையாதாஸ் |