நேகா பாசின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நேகா பாசின்
Neha Bhasin
Neha Basin at Audio release of Life Ki Toh Lag Gayi (1).jpg
தமது பாடலின் இசை வெளியீட்டு விழாவில்
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 18, 1982 (1982-11-18) (அகவை 41)
தில்லி, இந்தியா
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், நிகழ் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்2002-இன்றுவரை
இணைந்த செயற்பாடுகள்வீவா இசைக்குழு, தி நேகா பாசின் எக்சுபீரியன்சு
இணையதளம்www.nehabhasin.com

நேகா பாசின் (Neha Bhasin, பிறப்பு:நவம்பர் 18, 1982, தில்லி ) ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் நிகழ்கலை நிகழ்த்துனராகவும் பணியாற்றுகிறார். இவர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தன் சிறு வயது பள்ளிப் படிப்பையும் மேற்படிப்பையும் புது தில்லியிலேயே மேற்கொண்டார். எப்பொழுதும் இசையைப் பற்றியும், கலையைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்தார். இதனால் சிறு வயதிலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டார்.இந்தியப் பெண்கள் பாப்பிசைக் குழுவான வீவா!வில் பங்கேற்றுள்ளார்.

படைப்புகள்

தனிப்பாடல்கள்

  • 2005: "பிளீ டு மை லார்டு"
  • 2007: "நமஸ்தே சலாம்" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)
  • 2007: "ஓம் சாந்தி ஓம்" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)
  • 2008: "தனியே என் பக்கம்" (கவிதை குந்தர் . எம்சீ ஜாஸ்)
  • 2010: "ஆப்பிள் பாட்டம்ஸ் (தபா)
  • 2011: "தபா" (தபா)

திரைப்படப் பாடல்கள்

ஆண்டு பாடல் இசைக்கோவை/
திரைப்படம்
மொழி இசையமைப்பாளர் குறிப்பு
2005 புல்லட்- ஏக் தமாகா புல்லட்- ஏக் தமாகா இந்தி சோமேஷ் மதுர்
2006 ஏக் லுக் ஏக் லுக் ஆர்யன் இந்தி ஆனந்து ராச் ஆனந்து
2006 ஐ வான்னா ராக் லைக் மம்மி ஜி மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா
2005 குடியே படகா மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா
2006 ஜஷ்னா தி ராட் ஹா மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா
2007 பேசுகிறேன் பேசுகிறேன் சத்தம் போடாதே தமிழ் யுவன் சங்கர் ராஜா விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்) வாகையாளர்
2007 செய் ஏதாவது செய் பில்லா தமிழ் யுவன் சங்கர் ராஜா
2008 ஹரி புட்டர் ஹரி புட்டர் இந்தி ஆதேஷ் சிறீவசுதவா
2008 ”குச் காசு”, இதன் மறுஆக்கம் பேசன் இந்தி சோமேஷ் மதுர்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நேகா_பாசின்&oldid=8958" இருந்து மீள்விக்கப்பட்டது