நீர்வேலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீர்வேலி
நீர்வேலி is located in இலங்கை
நீர்வேலி
நீர்வேலி
ஆள்கூறுகள்: 9°43′26.48″N 80°5′14.8″E / 9.7240222°N 80.087444°E / 9.7240222; 80.087444


நீர்வேலி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும்.

பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன.

இடப்பெயர் வரலாறு

வலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக்கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம். மேலும் நிலத்தின் கீழ் நன்னீரூற்று அமைந்துள்ள சிறப்பும் இயற்கையாகவே இக்கிராமத்துக்கு உண்டு. இதனையே ‘ஊர்ப் பெயர் உட்பொருள் விளக்கம்’ என்னும் நூலில் ஸ்ரீ.இ.நமசிவாயம்பிள்ளை அவரக்ள் பின்வரும் பாடல் மூலம் எடுத்தியம்பியுள்ளார்:

தாவப் பலாலி கொணீர் வேலியார் படி தாவடியான்
மாவைப் புரி முகமாலயன் றேடும் வயவையன் பிற்
போயிட்டியை யுறுவார்க்கு நல்லூரைப் புரிவன் மண்டை
தீவைத் தெரிக்கு முன்னே யொட்டகப்புலந் தீத்துய்யவே

(தாவு அபல் ஆவி கொள – பாய்கின்ற பல பாகங்களிலுமிருந்து வருகின்ற மழைநீரைத் தன்னுள் அடக்குகின்ற நீர்வேலியூர் ஆர்படி சமுத்திர வேலியாற் சூழப்பட்ட பெரிய பூமி எனப்படுகின்றது.)[1]

வேலி என்பது பழந்தமிழ் சொல் வேரல், வேலி, வேர்க்கோட்பலவு என்ற தொடக்கத்தையுடைய குறுந்தொகைப் பாடல் (8) கண்கவேலி ஸ்ரீஅரண் மதில் எல்லை எனச் சோழர் காலத்து நில அளவுப் பெயர்களில் 'வேலி'யும் ஒன்றாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி ஈற்றுப் பெயர் கொண்டதாக நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, திருநெல்வேலி, சங்குவேலி முதலான இடங்கள் உள்ளன. இவற்றுள் நீர் நிலையைத் தனது கிழக்கெல்லையாகக் கொண்டதால் இக்கிராமம் நீர்வேலி ஆயிற்று. [2][3]

நீர்வேலி வடக்கில் "வாய்க்காற்றரவை" என்றோர் இடம் உண்டு. இப்பகுதியினூடாக மேற்குத் திசையில் உள்ள பகுதிகளிலிருந்து பாய்ந்துவரும் மழைநீர் கிழக்கே செல்லும் பெருவாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. (தரை - தரவை) வாய்க்கால் ஊடறுத்துச் செல்லும் பகுதி என்பதால் இப்பகுதிக்கு "வாய்க்காற்றரவை" (வாய்க்கால் + தரவை) என்னும் பெயர் அமைவதாயிற்று. (தென்ம 107. 11) [4][5]

பாடசாலைகள்

  • அத்தியார் இந்துக் கல்லூரி
  • கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
  • நீர்வேலி றோ.க.த.க பாடசாலை
  • நீர்வேலி சீ.சீ.த.க. பாடசாலை
  • நீர்வேலி தெற்கு இ.த.க பாடசாலை

வழிபாட்டிடங்கள்

அவற்றுள் சில:[6]

சங்கம்

நீர்வேலிவாழைக்குலை சங்கம்

நீர்வேலியைச் சேர்ந்தவர்கள்

இவற்றையும் பார்க்கவும்

  1. "ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம் (1983)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D. 
  2. "ஊரைப் பற்றி - நீர்வை இணையம்". https://neervai.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/. 
  3. "Accu-vēli, Kaṅku-vēli, Viḷai-vēli, Nel-vēlik-kuḷam". TamilNet. October 23, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30049. 
  4. ""இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2" (பாலசுந்தரம், இளையதம்பி) பக். 64". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2. 
  5. "Uvaayadi Vaaykkaal". TamilNet. July 3, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35345. 
  6. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  7. "நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம் (24.05.2019)". https://siruppiddy.webnode.page/products/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/productscbm_547861/60/. 
  8. "நீர்வேலி ஸ்ரீ காளி முத்துமாரி அம்பாள் ஆலய தேர் வெள்ளோட்ட விழா! (மார்ச் 8, 2017)". http://www.yarldevinews.lk/2017/03/blog-post_83.html. 
  9. "நிறுவனம்:யாழ்/ நீர்வேலி ஒல்லை வேம்படி ஞானவைரவர் கோயில்". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. 
"https://tamilar.wiki/index.php?title=நீர்வேலி&oldid=40017" இருந்து மீள்விக்கப்பட்டது