நீர் விளையாட்டு
Jump to navigation
Jump to search
நிலத்தில் விளையாடுவது போல் மக்கள் நீரிலும் விளையாடி மகிழ்ந்தனர். சங்ககாலத் தமிழர் கடல் நீரில் விளையாடிய பின் அவர்கள் ஆற்று நீரில் விளையாடி உடம்பிலுள்ள உப்புப் படிவைத் தூய்மை செய்துகொண்டனர்.[1]
அலவன் ஆட்டல், ஓரை, தைந்நீராடல், நீச்சல் நடனம், பண்ணை, புணை, புனலாடல், மூழ்கல், வண்டற்பாவை முதலான விளையாட்டுகள் சங்ககாலத் தமிழர் நீரிலும், ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள்.
பரிபாடல் நூலில் வையை பற்றிய பாடல்கள் [2] அனைத்தும் புனலாடல் விளையாட்டைப் பற்றியவை. இவற்றில் கூறப்பட்டுள்ள நீர் விளையாட்டுப் பொருள்கள் பல.
அடிக்குறிப்பு
- ↑
தீது நீங்க, கடல் ஆடியும்;
மாசு போக, புனல் படிந்தும்; (பட்டினப்பாலை அடி 99-100) - ↑ பரிபாடல் 6, 7, 10, 11, 12, 16, 20, 22