நிமலன் சௌந்தரநாயகம்
நிமலன் சௌந்தரநாயகம் Nimalan Soundaranayagam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for மட்டக்களப்பு மாவட்டம் | |
பதவியில் 2000–2000 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 நவம்பர் 1950 |
இறப்பு | 7 நவம்பர் 2000 கிரான், இலங்கை | (அகவை 50)
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
தொழில் | ஆசிரியர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் (Ashley Nimalan Soundaranayagam, 6 நவம்பர் 1950 - 7 நவம்பர் 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரநாயகம் பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.[1][2]
சௌந்தரநாயகம் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை.[3][4] மீண்டும் இவர் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]
படுகொலை
சௌந்தரநாயகம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் 2000 நவம்பர் 7 இல் கிரான் என்ற ஊரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2][6] இவரது கொலைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தலைவரும் இலங்கை அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.[7][8]
மேற்கோள்கள்
- ↑ "Soundranayagam, Ashley Nimalanayagam". இலங்கைப் பாராளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/3078.
- ↑ 2.0 2.1 "Batticaloa MP shot dead". தமிழ்நெட். 7 நவம்பர் 2000. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5560.
- ↑ தர்மரத்தினம் சிவராம் (16 யூன் 1996). "PA's new bank". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/960616/taraki.html.
- ↑ "Result of Parliamentary General Election 1994". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006015411/http://www.slelections.gov.lk/pdf/Results_1994%20GENERAL%20ELECTION-SM01.PDF.
- ↑ "General Election 2000 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115732/http://www.slelections.gov.lk/pdf/preference2000GE.PDF.
- ↑ Subramanian, Nirupama (8 நவம்பர் 2000). "TULF MP shot". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130818174123/http://hindu.com/2000/11/08/stories/0308000f.htm.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". தெ நேஷன்]] இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm.
- ↑ "Special Report No 17 - Rewarding Tyranny: Undermining the Democratic Potential for Peace". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. 7 அக்டோபர் 2003 இம் மூலத்தில் இருந்து 2012-06-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120627143642/http://www.uthr.org/SpecialReports/spreport17.htm.