நிகேசா படேல்
நிகேசா படேல் | |
---|---|
பிறப்பு | கார்டிஃப், வேல்ஸ் |
பணி | நடிகர், வடிவழகி |
நிகேசா படேல் (Nikesha Patel) என்பவர் ஒரு பிரித்தானிய-இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான புலி படத்தின் வழியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள திரைப்படங்களில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
நிகேஷா படேல் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். [1] இவர் வேல்சில் உள்ள கார்டிஃப் நகரில் பிறந்து வளர்ந்தார். இவரது பெற்றோர் இன்னும் வேல்சின் பாண்டிபிரிட் நகரில் வசிக்கின்றனர். இவர் 2006 மிஸ் வேல்ஸ் அழகு போட்டியில் இறுதி சுற்றுவரை சென்றார். [1] மேலும் மிஸ் இந்தியா யுகே போட்டியில் 5 பட்டங்களை வென்றார். நடிப்பில் ஆர்வும் கொண்ட இவர், பீட்டர் வூல்ரிட்ஜின் நடிப்புப் பள்ளியில் மூன்று ஆண்டுகளில் ஆறு முறை நிராகரிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இறுதியாக இவர் நடிப்பில் பட்டயப்படிப்பை முடித்தார். [2] இவர் தன் 15 வயதிலிருந்தே, கேஷுவல்டி, ட்ரேசி பீக்கர் மற்றும் டாக்டர் ஹூ போன்ற பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருந்தார். [2]
தொழில்
படேல் பின்னர் பாலிவுட்டில் பணிபுரியத் திட்டமிட்டு இந்தியா சென்றார். தன் தந்தையின் நண்பரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தேவ் ஆனந்த்தின் பியூட்டி குயின் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார், ஆனால் அப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. [2] பின்னர் இவர் 2010 ஆம் ஆண்டு இந்திய தெலுங்கு திரைப்படமான புலி திரைப்படத்தில் அறிமுகமானார். [3] அந்த படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்க எஸ். ஜே. சூரியா இயக்க, ஏ. ஆர். ரகுமான், பினோத் பிரதான், அகமது கான் ஆகியோர் கொண்ட மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றியது. [4] பின்னர் இவர் கன்னட திரையுலகிற்கு இடம்பெயர்ந்தார். படேல் ஹாலிவுட் நடிகர்-இயக்குனர் ஸ்டீவன் சீகலின் படத்தில் நடிக்கும் வாய்பை பெற்றார், என்றாலும் அப்படம் எடுக்கப்படவில்லை. அடுத்து இவர் மூன்று கன்னடப் படங்களில் நடித்தார். அதில் முதல்படமான நரசிம்மா, [5] படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான சைமா விருதைப் பெற்றார். அடுத்தவை, டகோட்டா பிக்சர் மற்றும் தெலுங்கு திரைப்படமான லட்சியம் (2007) படத்தின் மறுஆக்கமான வரதானாயகா ஆகியவை ஆகும். [6] நரசிம்மாவும், வரதநாயக்காவும் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், அந்த படங்கள் "ஒரு நடிகையாக தனக்கு திருப்தியளிக்கவில்லை" என்று கூறினார். [4] 2013 இல் இவர் தனது இரண்டாவது தெலுங்கு திரைப்படமான ஓம் 3 டி யில் நடித்தார். [7] [8] இது "இதுவரையான படங்களில் மிகவும் திருப்தி அளித்தது" என்று அவர் குறிப்பிட்டார். [4] 2012 ஆம் ஆண்டில் மலையாள படமான நியூஸ்மேக்கரில் மம்மூட்டிக்கு ஜோடியாக, ஒரு செய்தியாளராக நடிப்பதன் வழியாக மலையாளத்தில் அறிமுகமாகவிருப்பதாக தெரிவித்தார். [9] ரோஷன் ஆண்ட்ரூஸின் மலையாள திரைப்படமான மும்பை போலீசில் பிருத்விராஜுடன் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்பட்டது. [10] முந்தைய படம் தயாரிக்கப்படவில்லை, பிந்தைய படத்ததில் இவர் இடம்பெறவில்லை.
படேல் தமிழ்த் திரையுலகிலும் பணியாற்றத் தொடங்கினார். தமிழில் இவருக்கான முதல் வாய்ப்பாக நகுல் முக்கிய பாத்திரத்தில் நடித்த அமளி துமளி (தொடக்கத்தில் நண்பா என பெயரிடப்பட்டிருந்தது) திரைப்படம் அமைந்தது. ஆனால் அது வெளிவரவில்லை. ஆனால் பின்னர் இவர் நகுலுக்கு ஜோடியாக மற்றொரு தமிழ் படமான நாரதனில் நடிக்க ஒப்பந்தமானார். [11] நாரதன் தவிர கௌதம் கார்த்திக் மற்றும் ரகுல் பிரீத் சிங் [12] ஆகியோர் நடித்த என்னமோ ஏதோ மற்றும் தலைவன் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அடுத்த படங்கள் கன்னடத்தில் ஸ்ரீநகர் கிட்டி ஜோடியாக நமஸ்தே மேடம் [13] மற்றும் எம். எஸ். ராஜு இயக்கி, தயாரிக்கும் தெலுங்கு படமான, ஆர்.யூ.எம்., ஆகும். [14] 2016 ஆம் ஆண்டில், தெலுங்கு நாயகன் சாயுடன் அரகு ரோட் லோ படம் செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகக் கூறப்பட்டது, அடுத்து சக்தி வாசுவுடன் நடிக்கும் தமிழ் படமான 7 நாட்கள், கஸ்தூரிராஜாவின் பாண்டி முனி என பல மொழிகளில் பரபரப்பாக நடிக்கத் துவங்கிவிட்டார்.
திரைப்படவியல்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி (கள்) | குறிப்புகள் | மேற்கோள். |
---|---|---|---|---|---|
2010 | புலி | மதுமதி | தெலுங்கு | தெலுங்கில் அறிமுகம் | [15] |
2012 | நரசிம்மா | வர்ஷா | கன்னடம் | கன்னடத்தில் அறிமுகம் பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது |
[16] |
டகோட்டா பிக்சர் | ராதா | [17] | |||
2013 | வரதநாயக்க | சிறிஷா | [18] | ||
ஓம் 3டி | ரியா | தெலுங்கு | [19] | ||
2014 | தலைவன் | அனுஷா | தமிழ் | தமிழில் அறிமுகம் | [20] |
என்னமோ ஏதோ | காவ்யா | [21] | |||
நமஸ்தே மேடம் | ருக்மிணி | கன்னடம் | [22] | ||
2015 | அலோன் | பிரியா | [23] | ||
2016 | கரையோரம் | தமிழ் | [24] | ||
நாரதன் | மாயா / ஸ்வேதா | [25] | |||
லவ் யு ஆலியா | கன்னடம் இந்தி தெலுங்கு |
சிறப்புத் தோற்றம் | [26] | ||
அரகு ரோடு லோ | ரோஜா | தெலுங்கு | [27] | ||
2017 | குண்டூர் டாக்கீஸ் 2 | சுவர்ணன் | |||
7 நாட்கள் | பூஜா | தமிழ் | [28] | ||
2018 | பாஸ்கர் ஒரு ராஸ்கல் | கல்யாணி | [29] | ||
2019 | மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் | ஸ்டெபானி | |||
அறிவிக்கப்படும் | ஆயிரம் ஜென்மங்கள் | அறிவிக்கப்படும் | வெளியிடப்படவில்லை |
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Biography". 16 Reels. http://telugu.16reels.com/celebrities/Nikesha+Patel-Biography.aspx.
- ↑ 2.0 2.1 2.2 http://newindianexpress.com/entertainment/reviews/Nikesha-on-a-high-with-RUM/2013/10/19/article1842955.ece
- ↑ "Nikisha Patel debuts with Puli". சிஃபி இம் மூலத்தில் இருந்து 2010-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811143840/http://sify.com/movies/Nikisha-Patel-debuts-with-Puli-imagegallery-tollywood-kigmUmdfidf.html.
- ↑ 4.0 4.1 4.2 http://www.deccanchronicle.com/131129/entertainment-kollywood/article/i-dream-about-heroine-centric-films-nikesha-patel
- ↑ http://www.deccanherald.com/content/168530/everything-acting-excites-me.html
- ↑ "Nikesha wants to work with Puneeth Rajkumar" இம் மூலத்தில் இருந்து 2013-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130527014544/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-11/news-interviews/29758331_1_first-film-sudeep-tollywood.
- ↑ "Nikesha Patel's bikini act in Om". http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Nikesha-Patels-bikini-act-in-Om/articleshow/21081838.cms?.
- ↑ "sizzles in OM". http://www.rediff.com/movies/report/slide-show-1-south-nikesha-patel-om-3d-is-a-love-triangle/20130717.htm#4.
- ↑ "No full stops". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/no-full-stops/article3667818.ece.
- ↑ "Nikesha Patel hits a jackpot in Tamil" இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021214342/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-16/news-interviews/28698383_1_jackpot-tamil-film-industry-hits.
- ↑ "Nikesha's next with Nakul - The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Nikeshas-next-with-Nakul/articleshow/19649507.cms.
- ↑ "Nikesha's next with Gautham Karthik". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227165446/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-28/news-interviews/39578676_1_gautham-karthik-ravi-thyagarajan-kadal.
- ↑ "Kitty helps Nikesha Patel with her Kannada". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news-interviews/Kitty-helps-Nikesha-Patel-with-her-Kannada/articleshow/31399996.cms.
- ↑ "Nikesha signed her next Telugu flick - The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Nikesha-signed-her-next-Telugu-flick/articleshow/18345914.cms?referral=PM.
- ↑ "Komaram Puli (2010).". https://www.moviebuff.com/komaram-puli.
- ↑ "Narasimhaa (2012).". https://www.moviebuff.com/narasimhaa.
- ↑ "Dakota Picture (2012).". https://www.moviebuff.com/dakota-picture.
- ↑ "Varadhanayaka (2013).". https://www.moviebuff.com/varadhanayaka.
- ↑ "Om (2013).". https://www.moviebuff.com/om.
- ↑ "Thalaivan (2014).". https://www.moviebuff.com/bas-in-thalaivan.
- ↑ "Yennamo Yedho (2014).". https://www.moviebuff.com/yennamo-yedho.
- ↑ "Namasthe Madam (2014).". https://www.moviebuff.com/namasthe-madam-2014-kannada.
- ↑ "Alone (2015).". https://www.moviebuff.com/alone-2015-kannada.
- ↑ "Karaiyoram (2016).". https://www.moviebuff.com/karaiyorum.
- ↑ "Narathan (2016).". https://www.moviebuff.com/narathan.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Nikesha-bags-cameo-in-Luv-U-Alia/articleshow/45852226.cms
- ↑ "Araku Roadlo (2016).". https://www.moviebuff.com/araku-roadlo.
- ↑ "7 Naatkkal (2017).". https://www.moviebuff.com/7-naatkkal.
- ↑ "Baskar Oru Rascal (2018).". https://www.moviebuff.com/baskar-oru-rascal.