நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல
இயக்கம்தினேஷ் செல்வராஜ்
தயாரிப்புகூட்டு நிதிநல்கை
கதைஅன்னக்கிளி செல்வராஜ்
இசைபாடல்கள்:-
நவீன்
பின்னணி இசை:- ஜோன் சுர்ரா
நடிப்புகார்த்திக் ராஜ்
ஜெகதீஷ் கண்ணா
,ஷாரியா, இவான் ஸ்ரீ
ஒளிப்பதிவுஏ. டி, பகத்சிங்,
படத்தொகுப்புசேவியர் திலக்
கலையகம்ஆல்ஃபா ஸ்டிடுயோஸ்
விநியோகம்ஆல்ஃபா ஸ்டிடுயோஸ்
வெளியீடுமார்ச்சு 31, 2017 (2017-03-31)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல (Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla) 2017இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் தினேஷ் செல்வராஜ் (அறிமுகம்). இப்படம் கூட்டு நிதிநல்கைத் திட்டத்தில் ஆல்ஃபா ஸ்டிடுயோஸ் தயாரித்து வினியோகம் செய்திருந்தது. இப்படத்தில் கார்த்திக் ராஜ், ஜெகதீஷ் கண்ணா, ஷாரியா மற்றும் இவான் ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசை நவீன் மற்றும் ஜான் சுரோ, படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியிருந்தார். ஒளிப்பதிவு, ஏ. டி, பகத்சிங், படத்தொகுப்பு சேவியர் திலக், தயாரிப்பு வடிவைமைப்பு ஆல்ஃபா ஸ்டிடுயோஸ், நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் ரன் ரவி. இத்திரைப்படம் 2017 மார்ச் 31 அன்று வெளிவந்து சுமாரான வசூலை தந்தது. ஆனால் விமர்சன ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

கதை

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற தலைப்பு "நாயகன்" படத்தில் வரும் பிரபலமான வசனமாகும். ஆனால் அதிலிருந்து ஒரு சிறு திருப்பம் இதில் உண்டு. மணி ரத்னம் படத்தில், இவ்வசனமானது ஏராளமான பொருள்களைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் பிரபுவிடம் (ஷாரியா) அவரது நண்பர் சரியானதை செய்ய முடியவில்லை என்றால் எதுவும் பயனில்லை எனறு சொல்கிறார். பொன்விநாயகம் (அருள்ஜோதி) என்பவர் உலத்திலேயே ஒரு நேர்மையான ஓய்வு பெற்ற காவலர். அவர், ஒரு தொழிலதிபருக்கு தனது பணத்தைக் கொண்டு உதவி அவரைக் காப்பாற்றுகிறார்.

ஆனால், இந்த சமயத்தில் பிரபுவிற்கு ஐந்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது, அவனுக்கு வேறு வழியில்லை, அவனது மனம் விதிகளை மீறச் சொல்கிறது ஆனால் தைரியம் இல்லை. காவலரை கண்டவுடன் அவனது கைகள் பயத்தில் நடுங்க ஆரம்பிக்கின்றன. அவரது கூட்டாளிகளால் அச்சுறுத்தப்பட்டபோது அவர் பயந்து நடுங்குகிறான். அவனால் இது போன்ற ஒரு பெரிய காரியத்தை செய்யமுடியுமா? தனது தேவைக்காக பிரபு ஒரு உணவக உரிமையாளரிடம் திருட முயற்சிக்கும் போது, அவனுடைய அப்பா அங்கே பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றுகிறார் என்று கண்டுபிடித்து விடுகிறான். அவர் இவனுக்கு அறிவுரைக் கூறி நல்ல மனிதனாக மாற்றுகிறார்.[1]

நடிகர்கள்

  • கார்த்திக் ராஜ் - அருள்
  • ஜெகதீஷ் கண்ணா- ஜானி
  • ஷாரியா - பிரபு
  • இவான் ஸ்ரீ -ஸ்ரீதர்
  • அருள்ஜோதி - பொன் விநாயகன்
  • வைத்திய நாதன் - தர்மலிங்கம்

தயாரிப்பு

2013இல் வெளிவந்த "ஆபீஸ்" என்ற தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய கார்த்திக் ராஜ் இதில் நடித்திருந்தார். இப்படம் கூட்டு நிதிநல்கைத் திட்டத்தில் ஆல்ஃபா ஸ்டிடுயோஸ் தயாரித்து வினியோகம் செய்திருந்தது. இப்படத்தில் கார்த்திக் ராஜுடன், ஜெகதீஷ் கண்ணா, ஷாரியா, இவான் ஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசை நவீன் மற்றும் ஜான் சுரோ.[2] இப்படத்தை தயாரிக்க கூட்டு நிதிநல்கைத் திட்டத்தில் 75 நபர்கள் வங்கியில் பணம் செலுத்தியிருந்தனர்.[3] இப்படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு செல்வராஜ், இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே முதல் கடல் படம் வரை உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். இந்த திரைப்படம் ஆரம்பத்தில் "பூமராங்" எனப் பெயரிடப்பட்டது.[4] பூமராங் என்பது "கர்மா விசித்திரமான வழிகளில் உங்களைத் திருப்பித் தாக்கும்" என்பதை இது குறிக்கும். தினேஷ் இவ்வாறு கூறுகிறார்.[5] பட விளம்பரத்திற்காக பயன்படுத்த அனிருத் ரவிச்சந்தர் ஒரு பாடலைப் பாடினார். 2015 ஆம் ஆண்டின் மத்தியில் படப்பிடிப்பு முடிவடைந்தது.

விமர்சனம்

பிலிம் கம்பானியன் என்பதில் பரத்வாஜ் ரங்கன் "ஒரு சிறிய கயிரைக் கொண்டு பெரிய ஒன்றை இழுக்கும் முயற்சி இது " என்று எழுதினார்.[6]

குறிப்புகள்