நா. கல்யாணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நா. கல்யாணி
இயற்பெயர்/
அறியும் பெயர்
நா. கல்யாணி
பிறந்ததிகதி மே 12. 1946
அறியப்படுவது எழுத்தாளர்

நா. கல்யாணி (பிறப்பு: மே 12. 1946) மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'கல்யாணி மணியம்' என்ற புனைப் பெயரால் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1980 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன. மேலும், சிங்கை வானொலியிலும் இவரது ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் "சங்கொலி" இதழிலும் இவரது கதை இடம்பெற்றுள்ளது.

பரிசுகளும் விருதுகளும்

  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைகள் போட்டியிலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க மாதாந்திர சிறுகதைத் தேர்விலும் பலமுறை தங்கப் பதக்கப் பரிசுகள் பெற்றுள்ளார்.
  • "சிறந்த இதழ் கட்டுரையாளர்" என்னும் தேசிய விருதும் பெற்றுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=நா._கல்யாணி&oldid=6305" இருந்து மீள்விக்கப்பட்டது