நடு இரவில் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நடு இரவில்
திரைப்படச் சுஒரொட்டி
இயக்கம்சுந்தரம் பாலச்சந்தர்
தயாரிப்புசுந்தரம் பாலச்சந்தர்
கதைவி. இலட்சுமணன்
மூலக்கதைஅண்ட் தென் தேர் வேர் நான்
படைத்தவர் அகதா கிறிஸ்டி
இசைசுந்தரம் பாலச்சந்தர்
நடிப்புசுந்தரம் பாலச்சந்தர்
மேஜர் சுந்தர்ராஜன்
பண்டரி பாய்
சௌகார் ஜானகி
ஒளிப்பதிவுகே. வி. எசு. ரெட்டி
படத்தொகுப்புகே. கோவிந்தசாமி
கலையகம்வாகினி ஸ்டுடியோசு
விநியோகம்எசு. பி. கிரியேசன்சு
வெளியீடு1970
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடு இரவில் 1970 இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் அவருடன் மேஜர் சுந்தர்ராஜன், பண்டரி பாய், சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வி. இலட்சுமணன் திரைக்கதையையும், பாலச்சந்தர் வசனத்தையும் எழுதியிருந்தனர். பாலச்சந்தர் இசையையும் அமைத்திருந்தார்.[1] இத்திரைப்படம் அகதா கிறிஸ்டி (Agatha Cristhe) எழுதிய அண்ட் தென் தேர் வேர் நான் (And Then There Were None) புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[2][3][4]

கதைச்சுருக்கம்

ஒரு செல்வந்தர் நலம் குன்றிய தன் மனைவியை நன்கு கவனித்து வருகிறார். அவருடைய மருத்துவ நண்பர் அவருக்கு ரத்த புற்று நோய் பீடித்துள்ளதாகவும் இருபது நாட்களில் அவருக்கு மரணம் நேரலாம் என்றும் கூறுகிறார். செல்வந்தர் அதிர்ச்சி அடைகிறார். அந்த மருத்துவர் உங்கள் உற்றார், உறவினர் சூழ சிறிது காலம் வாழுங்கள் என கூற அவ்வாறே நடத்துகிறார் செல்வந்தர். ஒன்றன் பின் ஒன்றாக பல கொலைகள் நடக்கின்றன.

இறுதியில் செல்வந்தரால் வாரிசாக அழைக்கப்பட்ட பெண் கொலையுற நேரும்போது செல்வந்தர் கொலையாளியை சுட்டுக் கொல்ல மர்மம் விலகுகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிர் வெளிவர, கொலையாளி பற்றி தெரியவருகிறது.

செல்வந்தரும் மரணம் அடைகிறார்.

நடிகர்கள்

  • மேஜர் சுந்தரராஜன் - தயானந்தம்
  • பண்டரி பாய் - பொன்னி (தயானந்தத்தின் மனைவி)
  • சுந்தரம் பாலச்சந்தர் - டாக்டர் சரவணன்
  • சௌகார் ஜானகி - ராகிணி
  • சோ ராமசாமி - சர்வர் மோசு
  • வி. கோபாலகிருஷ்ணன் - ரங்க ராஜன் (சோமநாதனின் மருமகன் / லீலாவின் கணவர்)
  • வி. ஆர். திலகம் - லீலா (இரங்கராஜனின் மனைவி)
  • எம். எசு. எசு. பாக்கியம் - நீலமேகத்தின் மனைவி
  • இ. ஆர். சகாதேவன் - நீலமேகம்
  • கே. விசயன் - அரவிந்தன் (வடிவாம்பாளின் மூத்த மகன்)
  • வி. எசு. ராகவன் - சம்புலிங்கம் (தயானந்தத்தின் இளைய சகோதரர் / பார்வையற்றவர்)
  • சதன் - கல்யாண் (அரவிந்தனின் இளைய சகோதரர்)
  • கொட்டப்புளி ஜெயராமன் - ஜோசப் (தயானந்தத்தின் வீட்டு வேலைக்காரர்)
  • மாலி என்கிற மகாலிங்கம் - மோகனாம்பாளின் மகன்
  • எசு. என். இலட்சுமி - வடிவாம்பாள் (தயானந்தத்தின் சகோதரி)
  • சி.வி.வி. பந்தலு - சோமநாதன்
  • கல்பனா - அனு ராதா (நீலமேகத்தின் மகள்)
  • எசு. ஆர். ஜானகி - மோகனாம்பாள் (தயானந்தத்தின் சகோதரி)
  • ராமானுசம் - மொட்டையன்
  • சரோசா - பங்கசம் (மொட்டையனின் மகள்)

பாடல்கள்

நடு இரவில்
இசை
வெளியீடு1970
ஒலிப்பதிவு1970
இசைப் பாணிசரீகம
நீளம்21:01
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சுந்தரம் பாலச்சந்தர்

சுந்தரம் பாலச்சந்தர் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை வி. இலட்சுமணன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர் பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 கண் காட்டும் சாடையிலே பி. சுசீலா வி. இலட்சுமணன் 06:11
2 கண் காட்டும் சாடையிலே (சோகம்) 07:00
3 நாலு பக்கம் ஏரி எல். ஆர். ஈசுவரி 04:27
4 நாலு பக்கம் ஏரி -2 03:23

மேற்கோள்கள்

  1. Vijayakumar, B. (28 September 2014). "Panchathantram: 1974". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/panchathantram-1974/article6452869.ece. பார்த்த நாள்: 3 November 2016. 
  2. "Author of incredible reach". The Hindu. 24 October 2008. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article1436117.ece. பார்த்த நாள்: 3 November 2016. 
  3. "Nadu Iravil" இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002656/http://www.in.com/tv/movies/raj-digital-plus-161/Nadu-Iravil-22786.html. பார்த்த நாள்: 3 February 2016. 
  4. "Nadu Iravil". spicyonion. http://spicyonion.com/movie/Nadu-Iravil/. பார்த்த நாள்: 3 February 2016. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நடு_இரவில்_(திரைப்படம்)&oldid=34477" இருந்து மீள்விக்கப்பட்டது