நக்கீரர், திருவள்ளுவமாலைப் பாடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நக்கீரர் பலருள் ஒருவர் திருக்குறளைப் போற்றிப் பாடியதாகத் திருவள்ளுவமாலை தொகுப்பில் ஒரு பாடல் உள்ளது. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என முப்பாலாக உள்ளது. ஆனால் இந்தப் புலவர் நக்கீரர் வீட்டுநெறியும் இதன்கண் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல் இவர் பெயரில் அடைவு செய்யப்பட்டுள்ள பாடல் என்பது அறிஞர்கள் கருத்து. அடைவு செய்யப்பட்ட காலம் 11 ஆம் நூற்றாண்டு.

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

கருவிநூல்