ந. சுசீந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ந. சுசீந்திரன் ஒரு புலம்பெயர் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். இலங்கையில் நெடுந்தீவில் பிறந்தவர். 1980களில் செருமனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர் செருமானிய அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். கலை இலக்கியம் குறித்த கட்டுரைகளைப் புகலிடத்திலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை இடாய்ச்சு மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து இடாய்ச்சுக்கும் மொழிபெயர்த்திருக்கிறார்.[1]

பங்களிப்பு

அரசியல், இலக்கியம், மனிதகுல வரலாறு ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். பெர்டொல்ட் பிறெஹ்ட், குந்தர் கிராஸ், ஹைன்றிஸ் பொல், எறிக் பிறீட் போன்றவர்களது படைப்புக்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். தமிழ்ப் படைப்பாளிகளை இடாய்ச்சு மொழிக்கு அறிமுகப்படுத்தி எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

பல்வேறு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு இலங்கையின் அரசியல் யாப்பு, சமஸ்டி அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு, மனித உரிமைமீறல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ந._சுசீந்திரன்&oldid=8634" இருந்து மீள்விக்கப்பட்டது