தீபா ராமானுஜம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீபா ராமானுஜம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தீபா ராமானுஜம்
பிறப்புபெயர் தீபா
பிறந்தஇடம் விருதுநகர், த்ஹமிழ்நாடு
பணி
  • நடிகர்
  • நாடக எழுத்தாளர்
  • இயக்குனர்
தேசியம் இந்தியர்
துணைவர் ராமானுஜம்

தீபா ராமானுஜம் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றும் நடிகை ஆவார்.[1][2] கே. பாலச்சந்தரின் தொலைக்காட்சித் தொடரான பிரேமி யில் நடிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் (1997) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார்.[2] அருண் வைத்தியநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.[3] அமெரிக்காவை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான ஷ்ரத்தா மற்றும் க்ரியாவுடன் இணைந்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த அறிவியல் புனைகதை மேடை நாடகமான சில்லுவை இயக்கியதற்காக அவர் பிரபலமானார்.[4] சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் புவனேஸ்வரியாக நடித்ததற்காகவும் அவர் நன்கு அறியப்பட்டவர்.

2020 ஆம் ஆண்டு முதல் தீபா ஒரு தொழிலதிபராக மாறி, லோட்டஸ்லைன் பரணிடப்பட்டது 2022-10-06 at the வந்தவழி இயந்திரம் என்ற பெயரின் கீழ் இந்தியப் பெண்களுக்காகத் தனது சொந்த படைப்பில் ஜீண்ஸ் அணிகளைத் த்யாரிக்கத் தொடங்கினார்

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
1997 அருணாசலம் அறிமுகம்
2003 பாய்ஸ்
2015 உத்தம வில்லன் ராணி
2015 பசங்க 2 பள்ளியின் முதல்வர்
2016 ரஜினி முருகன் முருகனின் தாய்
2016 பிச்சைக்காரன் புவனேஸ்வரி
2016 இது நம்ம ஆளு மைலாவின் தாய்
2017 ஸ்பைடர் சிவனின் தாய் தமிழ் - தெலுங்கு இருமொழிப் படம்
2017 விமானம் வெங்கிடியின் தாய் மலையாளப் படம்
2018 அபியும் அனுவும்/அபியுதே கதை அனுவிந்தேயும் அபியின் அம்மா தமிழ்-மலையாளம் இருமொழிப் படம்
2019 சிவப்பு மஞ்சள் பச்சை ராஜசேகரின் தாய்
2019 ஆதித்ய வர்மா ஆதித்ய வர்மாவின் தாய்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தீபா_ராமானுஜம்&oldid=22934" இருந்து மீள்விக்கப்பட்டது