தில் ஏக் மந்திர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தில் ஏக் மந்திர்
Dil Ek Mandir
இயக்கம்ஸ்ரீதர்
இசைஷங்கர் - ஜெய்கிஷன்
நடிப்புஇராஜேந்திர குமார்
மீனாகுமாரி
ராஜ்குமார்
ஒளிப்பதிவுஏ. வின்செண்ட்
படத்தொகுப்புஎம். எம் சங்கர்
வெளியீடு18 சனவரி 1963 [1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்11 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு Bad rounding hereFormatting error: invalid input when rounding or US$Bad rounding hereFormatting error: invalid input when rounding) [2]

தில் ஏக் மந்திர் (Dil Ek Mandir) என்பது 1963 ஆண்டைய இந்தி காதல் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீதர் இயக்கியுள்ளார். படத்தில் இராஜேந்திர குமார், மீனாகுமாரி, ராஜ்குமார், மெஹ்மூத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு இரட்டை இசையமைப்பளர்களான ஷங்கர் - ஜெய்கிஷன் இசையமைத்தனர். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்று, எல்லோரும் ரசித்தனர். படமும் பெரிய வெற்றியை ஈட்டியது. இப்படம் தமிழ்த் திரைப்படமான ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தின் மறு ஆக்கமாகும்.[3]

நடிகர்கள்

  • ராஜேந்திர குமார் - மரு தர்மீஷ்
  • மீனாகுமாரி– சீதா
  • ராஜகுமார்– ராம்
  • மெஹ்மூத் – லல்லு லால்
  • குட்டி பத்மினி – உமா
  • சுபா கோட்டே - மைனாவதி
  • மன்மோகன் கிருஷ்ணா - பிலிப்
  • ஆச்சால சட்சேவ் - தர்மேஷின் தாயார்

தயாரிப்பு

தில் ஏக் மந்திர் படமானது ஸ்ரீதர் இயகிய தமிழ் படமான நெஞ்சில் ஓர் ஆலயம் (1962). படத்தின் மறு ஆக்கமாகும். மொத்த படமும் 27 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்டது.

விருதுகள்

இந்தப் படமானது 11வது பிலிம்பேர் விருதுகளில் ராஜ் குமாருக்குச் சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதையும், சிறந்த உரையாடலுக்கான விருதை அர்ஜுன் தேவுக்கும் பெற்றுத் தந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தில்_ஏக்_மந்திர்&oldid=29516" இருந்து மீள்விக்கப்பட்டது