திருவிருத்தம் (திருநாவுகரசர்)
Jump to navigation
Jump to search
திருநாவுகரசர் பாடிய தேவாரப் பாடல்களில் நான்காம் திருமுறையில் சரக்கறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமான்மீது பாடிய பாடல்கள் சரக்கறைத் திருவிருத்தம் என்னும் பெயரைத் தாங்கியுள்ளன. யாப்பு நெறியில் கட்டளைக் கலித்துறை எனக் குறிப்பிடப்படும் பாடல்கள் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.
திருநாவுக்கரசர் பாடிய திருவிருத்தம் - எடுத்துக்காட்டு
திருவிருத்தக் கட்டளைக்கலித்துறை இலக்கண நோக்கில் சீர் பிரிப்பு
- விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்
- படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்
- உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ்
- சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. [1] [2]
மேலே உள்ள பாடல் பொருள் உணரும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது
- விடையும் விடைப் பெரும்பாகா என் விண்ணப்பம்; வெம் மழு ஆட்
- படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலித் தோல்
- உடையும் உடைதலை [3] மாலையும் மாலைப்பிறை [4] ஒதுங்கும்
- சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே.
வெளி இணைப்பு
- சரக்கறை - திருவிருத்தம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்