திருமுறைத் திரட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மூவர் தேவாரப் பாடல்களை 'அடங்கன்முறை' என்பர். திருமுறை எனவும் சிறப்பு வகையால் இதனை வழங்குவர். இந்தத் திருமுறைப் பாடல்களிலிருந்து சில பாடல்களைத் தெரிந்தெடுத்துத் தொகுத்துத் திருமுறைத் திரட்டு [1] என்னும் பெயரில் வெளியிட்டுள்ளனர். இப்படி வெளிவந்த திரட்டுகளில் குறிப்பிடத் தக்கவை இரண்டு. முதலாவது திரட்டு உமாபதி சிவாசாரியர் திரட்டியது. மற்றொன்று 'அகத்தியர் திரட்டு' என்னும் பெயருடன் வெளிவந்துள்ளது.

முதலாவது திருமுறைத் திரட்டு 99 திருப்பாசுரங்களைக் கொண்டது. இதில் சம்பந்தர் பாடல்கள் 26, அப்பர் பாடல்கள் 63, சுந்தரர் பாடல்கள் 10 தொகுக்கப்பட்டிள்ளன.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 113. 
"https://tamilar.wiki/index.php?title=திருமுறைத்_திரட்டு&oldid=17344" இருந்து மீள்விக்கப்பட்டது