திருமுருகன் காந்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருமுருகன் காந்தி இந்திய தேசத்தை சேர்ந்த தமிழ்த்தேசியவாதி மற்றும் பெரியாரிய சமூக சீர்த்திருத்தவாதி ஆவார். இவர் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பான மே 17 இயக்கம் என்கிற அமைப்பை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக உருவாக்கினார். திருமுருகன் காந்தி தமிழீழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக் குறித்த மே 17 இயக்கத்‌தின் கருத்துக்கள், செயற்பாடுகள் குறித்து 2012 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் நடந்த ஒரு பேரணியில் விளக்கியிருந்தார்.[1] இவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து அது சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருந்துள்ளார்.

மே 17 இயக்கத்‌தின் கருத்துகள் தமிழீழத்தில் இனப்படுகொலை கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற பண்பாட்டு உரிமையான நினைவேந்தல் நிகழ்வை மெரீனாவில் நடத்த தடை போடுவதென்பது சர்வதேச சட்டங்களின் படி உரிமை மீறல் என்று தெரிவித்தனர். நினைவேந்தல் உரிமையை மீட்டெடுப்போம் என்றும், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை அடக்குமுறை வந்தாலும், தொடர்ந்து தமிழர் கடலான மெரீனாவில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா சபையில் பேசியிருக்கிறார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருமுருகன்_காந்தி&oldid=27764" இருந்து மீள்விக்கப்பட்டது