திருநீர்மலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருநீர்மலை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் பல்லாவரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

30,702 (2011)

6,396/km2 (16,566/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.80 சதுர கிலோமீட்டர்கள் (1.85 sq mi)

திருநீர்மலை (ஆங்கிலம்:Thiruneermalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது சென்னையின் புறநகர் பகுதி ஆகும். 108 வைணவத் திவ்விய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்

திருநீர்மலை அருகே 4-5 கிமீ தொலைவில் பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்திலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ளது.

பகுதியின் அமைப்பு

4.80 சகிமீ பரப்பும், 216 தெருக்களையும் கொண்ட இப்பகுதி பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 7,660 வீடுகளும், 30,702 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 90.50% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

சிறப்புகள்

திருநீர்மலை, ஒரு திவ்வியதேச தலமாகும். இங்குள்ள திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில், பெருமாள் நீர்வண்ணராக திருநீர் மலையடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.[4]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருநீர்மலை&oldid=40556" இருந்து மீள்விக்கப்பட்டது