திரான்
Jump to navigation
Jump to search
| திரான் Diran | |
|---|---|
| படிமம்:Diran P8050944.jpg இராகபோசி சிகரத்தின் முகாமிலிருந்து காணப்படும் திரான் சிகரம் | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 7,266 m (23,839 அடி)[1] 93வது சிகரம் |
| புடைப்பு | 1,325 m (4,347 அடி)[1] |
| ஆள்கூறு | 36°07′N 74°40′E / 36.117°N 74.667°E[1] |
| பெயரிடுதல் | |
| தாயகப் பெயர் | دیرن (உருது) |
| புவியியல் | |
| அமைவிடம் | வடக்கு நிலங்கள், பாக்கித்தான் |
| மூலத் தொடர் | காரகோரம் |
| ஏறுதல் | |
| முதல் மலையேற்றம் | இரெய்னர் கோசல், உருடால்ப் பிசிங்கர் மற்றும் ஆன்சு செல், (1968) |
| எளிய வழி | Rock/snow/ice climb |
திரான் (Diran) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானிலுள்ள பக்ரோட் பள்ளத்தாக்கிலுள்ள காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். 7,266 மீட்டர் (23,839 ) உயரம் கொண்ட பிரமிடு வடிவ மலை இராகபோசி சிகரத்திற்கு கிழக்கே (7,788 மீ) அமைந்துள்ளது.
திரான் மலையில் முதன்முதலில் 1968 இல் இரெய்னர் கோசல், உருடால்ப் பிசிங்கர் மற்றும் ஆன்சு செல் என்ற மூன்று ஆஸ்திரியர்கள் மலையேறினர். 1959 இல் ஒரு ஜெர்மன் பயணம் மற்றும் 1964 இல் ஒரு ஆஸ்திரிய பயணத்தின் முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்தன.[2][3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Diran". Peakbagger.com. Retrieved 2 October 2011.
- ↑ "The Mountains of Pakistan: Diran Peak". EverestNews.com. Retrieved 2 October 2011.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Minapin or Diran".