தியாகராசர் கழிநெடில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தியாகேசர் கழிநெடில் என்பது பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பதிக நூல்.
இதில் 12 சீர்கள் கொண்ட கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் உள்ளன.
இதன் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர்.

  • நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு.
அரவக் கிண்கிணி கால்காட்டி அரியாசனத்திருக்கும் கருணாநிதியை ஆரூரில் கண்டார் பிறவி காணாரே 

எனத் திருவாரூர் பெருமானை இந்த நூல் போற்றுவது இந்த நூலில் காணப்படும் மணிமுடி.

  • பாடலில் திருவாரூர்ப் பெருமானின்
சிறப்புச் சின்னங்கள்
திருவந்திக் காப்பு
திருச்சான வாயில்
மூவர் தமிழ்
வீரசோழிய அரியணை
அசபா நடனம்
பங்குனித் தேரோட்டம்
திருமுழுக்கு
பங்குனி உத்தரம்
கமலாலயம்
திருவாசகத் தேன்
திருவாதிரை

முதலானவை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://tamilar.wiki/index.php?title=தியாகராசர்_கழிநெடில்&oldid=17312" இருந்து மீள்விக்கப்பட்டது