தமிழர்விக்கி நடைக்கேற்ப
நடைக் கையேடு, கட்டுரைகளின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை விளக்கும் கையேடாகும். ஒரே விதமான நடையை அனைவரும் பின்பற்றுவது கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்பினரால் இணைந்து உருவாக்கப்பட்டு அடையாளம் பதிப்பின் மூலம் வெளிவந்த தமிழ் நடைக் கையேடு என்ற நூலில் சீர்நடையின் தேவையைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்கள்.
“ | ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் எழுதுவது சீராகவும் கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும். | ” |
- நன்னூலில் கூறப்பட்டுள்ள பத்து குற்றங்களும் பத்து அழகுகளும் தமிழர்விக்கிக்கும் பெரும்பாலும் பொருந்தும். தக்கவாறு பயன்படுத்துதல் நல்லது.
பத்துக் குற்றம்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே
பத்து அழகு
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே
|
பொதுக் கொள்கைகள்
உள் ஒருமைப்பாடு
நடையும், வடிவூட்டுதலும் ஒரு கட்டுரைக்குள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய கொள்கை ஆகும்; அது தமிழர்விக்கியின் எல்லா கட்டுரைகளுக்கும் ஒன்றுதான் என்பதல்ல. ஒரு வகையான தகவல் வெளியீடு, மற்றொரு வகையைவிட நன்றாக இருக்கலாம், ஆனால் ஒரு கட்டுரையின் உள்ளே அக்கட்டுரையின் நடையையும் வடிவமைப்பையும் ஒரே சீராக வைத்திருப்பது படிப்பவருக்கு தெளிவையும் நிறைவையும் உண்டாக்கும் வாய்ப்பு கூட உள்ளது. அதனால், இந்தக் கையேடு பல வித பயன்முறைகளை ஆதரித்தாலும், ஒரு கட்டுரைக்குள் அதன் நடை உள் இசைவுடன் இருப்பது நல்லது.
கட்டுரைகளின் உறுதி
நடுவர் குழாம் (The Arbitration Committee) தொகுப்பாசிரியர்கள் ஒரு கட்டுரையின் நடையை , நடையைப் பற்றிய காரணமின்றி வேறொரு காரணத்தை முன்னிட்டும் , மற்றொரு நடைக்கு மாற்றக் கூடாது, என தீர்மானித்து உள்ளனர். மேலும் நடையைப் பற்றிய சச்சரவுகளும் தவிர்க்க வேண்டியவை. ஒரு கட்டுரையின் நடையை பற்றிய வேறுபாடு இருந்தால், முதலில் பெரிய அளவில் பங்களித்த எழுத்தாளரின் உரையை கையாளுக.
மூலங்கள் சான்றுகோள்களின் அடிப்படையைப் பின்பற்றுக
பார்க்க: தமிழர்விக்கி நூதன ஆய்வு இல்லை
பல எழுத்து முறைகள் , எ.கா. நபர்களின் பெயர்களை எழுதுவது, எப்படி மற்ற எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள் என்பதைப் பார்த்து தீர்மானிக்கலாம். வேறொரு சிறந்த காரணம் இல்லாவிட்டால், எப்படி தரமான இரண்டாம் வகை தமிழ் மூலங்களில் எழுத்து முறை கையாளப் படுகிறதோ, அதையே பின்பற்றவும், அந்த கட்டுரையின் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்க வேண்டும். கட்டுரையின் ஆதாரங்கள் தற்காலத்திய வழக்கு தமிழின் பிரதிநிதியாக இல்லாவிட்டால், தற்கால வழக்கு தமிழைப் பின்பற்றவும், அதன் ஆதாரங்களை ஆலோசிக்கவும்.
தமிழர்விக்கி:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல்
கட்டுரைத் தலைப்புகள்
முதன்மை கட்டுரை: தமிழர்விக்கி:பெயரிடல் மரபு
கூடுமானவரை கட்டுரையின் தலைப்பு எழுவாயாக இருக்க வேண்டும், பயனிலையாக வருதலைத் தவிர்க்கவும். எந்த ஒரு வேற்றுமை உருபும் ('ஐ', 'ஆல்', 'கு' போன்றவை) இணைக்கப்படாத தனிப் பெயர்ச்சொல்லாக வர வேண்டும். எதுவாயிருப்பினும் கட்டுரையின் முதல் வரியிலோ முதல் பத்தியிலோ தலைப்பு வரும் வகையில் எழுத வேண்டும்.
கட்டுரையில் முதன் முறை தலைப்பு வரும்பொழுது அதை ''' ''' என்ற விக்கி குறியீட்டைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, '''நடைக் கையேடு''' என்று எழுதினால் நடைக் கையேடு என்று வரும்
இதைத் தவிர எந்தெந்த இடங்களில் தலைப்பு சாய்வெழுத்துக்களில் வர வேண்டும் என்று அறிய #சாய்வெழுத்துக்கள் பகுதியைப் பாருங்கள்.
துணைத் தலைப்புகள்
முதன்மை கட்டுரை: Wikipedia:நடைக் கையேடு (தலைப்புகள்)
துணைத் தலைப்புகளை தெரியப்படுத்த ==
(2ஆம் படித்தலைப்பு) என்ற விக்கி குறியை பயன்படுத்துங்கள்; தடித்த எழுத்துக்களுக்கான விக்கி குறியான '''
(தடித்த எழுத்து) என்பதை பயன்படுத்த வேண்டாம். எடுத்துக்காட்டு:
==இது ஒரு துணைத் தலைப்பு==
என தொகுப்பு பெட்டியில் எழுதினால்
- இது ஒரு துணைத் தலைப்பு
என வரும்.
இம்மாதிரி துணைத் தலைப்புகளை எழுதினால், தானாகவே கட்டுரை உள்ளடக்க அட்டவணை உருவாக்கப்படும். மேலும், இவ்வாறு எழுதப்படும் துணைத் தலைப்புகளில் உள்ள சொற்களுக்கு தேடல் முடிவுகளில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். மேலும், இவ்வாறு எழுதுவது வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தையும் எளிமையாக்கும்.
- துணைத் தலைப்புகளில் இணைப்புகள் தருவதைத் தவிர்க்கவும்.
- அளவுக்கு அதிகமாக துணைத் தலைப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
நிறுத்தக்குறிகள்
பொது: நிறுத்தக்குறிகள்
பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையைத் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளை எழுத்துக்குறிகள் என்கிறோம். இவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைகள் தமிழர்விக்கி:நடைக் கையேடு (நிறுத்தக்குறிகள்) எனும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இலக்கங்களை எழுதுதல்
பொது: இலக்கங்களை எழுதுதல், en:Wikipedia:Manual of Style (dates and numbers)
ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுங்கள். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலும் குறிப்பிடலாம்.
(சரியான நடை) ஐந்தாம் நூற்றாண்டு, 17ஆம் நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு
(தவறான நடை) 5ஆம் நூற்றாண்டு, 02 போட்டிகள்
மாற்றுச் சொற்கள்
முதன்மைக் கட்டுரை-தமிழர்விக்கி:நடைக் கையேடு/மாற்றுச் சொற்கள்
செயப்பாட்டுவினையைத் தவிர்க்கவும்
செயப்பாட்டுவினை (passive voice) பெரும்பாலான இடங்களில் தவிர்க்கத்தக்கது. அது வாசிப்பதற்குத் தடையாகவும் தமிழ்மொழிக்கு இயல்பல்லாததால் குழப்பமாகவும் இருக்கும். "தவிர்க்கப்படக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்பதைத் "தவிர்க்கக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்றே சொல்லலாம். அதுதான் இயல்பான பேச்சுவழக்கும் பண்டைத்தமிழ்மொழி இயல்புமாகும். செயப்பாட்டுவினை பெரும்பாலும் ஆங்கிலத்தின் செயப்பாட்டு வினையை அப்படியே நேரடிமொழிபெயர்ப்பால் விளைவது. "Edited pages" என்பதைத் "தொகுக்கப்பட்ட பக்கங்கள்" என்னாமல் "தொகுத்த பக்கங்கள்" என்றே இயல்பாகச் சொல்லலாம். நாம் தமிழ்மொழியில் "கேட்ட கேள்வி" என்றுதான் சொல்கிறோம். "கேட்கப்பட்ட கேள்வி" என்று சொல்வதில்லையே! சிலசமயங்களில் குழப்பத்தைத் தவிர்க்கவும் நெருக்கடியினாலும் செயப்பாட்டுவினையைப் புழங்குவதில் தவறில்லை. இங்கே சொல்லியுள்ளது ("சொல்லப்பட்டுள்ளது" என்று சொல்லவேண்டாம்!) பொதுவான நெறிமுறையே!
பிற மொழிப் பெயர்கள்
பிற மொழிப் பெயர்களை (இடங்கள், நபர்கள்) தமிழில் எழுதும் பொழுது, அப்பெயர்களை உரோமன் எழுத்தில் அடைப்புக்குறிக்குள் தாருங்கள் (இது ஆங்கிலம், பிரான்சியம் இடாய்ச்சு போன்ற மொழிகளில் இருக்கலாம்). இப்படி செய்வதால், பிற இணையத்தளங்களில் இந்தப் பெயர் குறித்து தேட உதவியாக இருக்கும். தமிழர்விக்கி பக்கங்களை உரோமன் எழுத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தேடுவதற்கும் இது உதவும். தமிழில் ஒலிபெயர்த்து எழுதும்பொழுது தமிழில் மெய்யொலிக்கூட்டம் என்னும் கட்டுரையின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். பிறமொழிப்பெயர்களே ஆயினும், தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது என்பன போன்ற விதிகளைப் பின்பற்றி எழுதுங்கள்.
தேதிகள்
- தமிழ் நாட்காட்டி முறை அனைத்துலகத் தமிழர்களால் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதால், குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டி முறையை தமிழ் தமிழர்விக்கியில் பின்பற்றுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி முறையில் திகதிகள் அறியப்படாத பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றுத் தகவல்கள் மட்டும் தமிழ் நாட்காட்டி முறையின் கீழ் தரப்படலாம். ஆங்கில நாட்காட்டித் தேதிகளுடன் கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல்கள் தருவது வரவேற்கப்படும் வேளையில், எத்தருணத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தமிழ் மாதப் பெயர்கள் இங்கு விளக்கப்பட்டுள்ள தமிழ் நாட்காட்டி முறைக்கு இணங்க மட்டுமே இருத்தல் அவசியம்.
- கி.பி ஆண்டுகளின் முன் கி.பி எனக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், கி.மு ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கி.மு எனக் குறிப்பிடவும்.
- இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு போன்ற சொற்றொடர்களை தவிர்த்து, ஆண்டு எண்ணை குறிப்பிட்டே எழுதுங்கள். இப்படி எழுதுவதின் மூலம், அடிக்கடி கட்டுரையில் உள்ள தகவல்களை இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம்.
இணைப்புகள்
- ஒரே உட்பக்கத்துக்கு திரும்பத் திரும்ப குறுகிய இடைவெளிகளில் உள் இணைப்பு தருவதைத் தவிர்க்கவும்
சாய்வெழுத்துக்கள்
பின் வரும் இடங்களில் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தவும்.
- படைப்புத் திறன் வெளிப்பாடுகள்
- நூல்களின் பெயர்கள்
- திரைப்படப் பெயர்கள்
- பாடல், கவிதை வரிகள்
- மேற்கோள்கள்
- உயிரியல் பெயர்கள்
- (எ.கா) சொலனஸ் நைக்ரம் (மணத்தக்காளி)
- பிறமொழிச் சொற்களின் எழுத்துப்பெயர்ப்புகள்
- எழுதப்படும் பொருள் ஒரு சொல்லாகவோ அல்லது எழுத்தாகவோ இருப்பின் அதை சாய்வெழுத்தில் குறிப்பிடவும்.
- (எ.கா)
- அகரம் தமிழ் அரிச்சுவடியில் உயிரெழுத்துக்களில் முதலெழுத்தாகும்.
- நாகரீகம் என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்பது பற்றி மொழியியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
தலைப்புகள்
Main article: Wikipedia:Manual of Style (titles)
சாய்வெழுத்துகள் கீழ்கண்டவைகளின் தலைப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
- நூல்கள்
- கணினி, நிகழ்பட ஆட்டங்கள்
- அறமன்ற வழக்குகள்
- திரைப்படங்கள்
- நீண்ட கவிதைகள்/காப்பியங்கள்
- பாட்டு தொகுப்புகள்
- தனியார் பெயர் தாங்கிய பயண வண்டிகள்
- இசை ஆக்கங்கள்
- இதழ்கள் (நாளிதழ்கள், கிழமை இதழ்கள், மாதிகை)
- நாடகங்கள்
- பெயர் சூட்டப்பட்ட கப்பல்கள்
- தொலைக்காட்சித் தொடர்கள்
- ஓவியம், கலைப் பொருள்கள்
பொதுவாக நீண்டஆக்கங்களுக்கு சாய்வெழுத்து பயன்படுத்தவும். கீழுள்ள சிறிய ஆக்கங்களின் தலைப்புகள் மேற்கோள் குறிகளுக்கிடையே இருக்க வேண்டும்.
- கட்டுரைகள், உரைகள்
- பெரிய நூலின் உட்பிரிவுகள்
- தொலைக்கட்சி தொடரின் தனிப் பகுதிகள்
- சிறிய கவிதைகள்
- குறுநாவல்கள் (குறும்புதினங்கள்)
- பாட்டுகள்.
சில இடங்களில் தலைப்பு சாய்வெழுத்திலோ, மேற்கோள் குறிகளுக்கிடையிலோ இருத்தல் கூடாது
- மதச் சொற்பொழிவுகள்
- நீதிமன்ற, சட்டமன்ற ஆவணங்கள்
சொற்களைச் சொற்களாகக் குறிப்பிடும் பொழுது
சொற்களைச் சொற்களாகவோ, ஓர் எழுத்தை எழுத்தாகவோ குறிப்பிடும் போது சாய்வெழுத்தை பயன்படுத்துக. எடுத்துக்காட்டு:
உலகமயமாகுதல் என்பது உலகளவில் பன்னாடுகளிடையே ஏற்படும் பொருட்கள், கலாசாரம், கருத்து, மூலதனம் இவற்றின் ஏற்றுமதி-இறக்குமதிகளை குறிக்க 20 ஆண்டுகளாகப் பயன்படுகிறது. (இங்கு உலகமயமாதல் என்பது அச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஆகையால் அச்சொல்லைக் சாய்வெழுத்துகளில் காட்டவும்)
தமிழில் உள்ள சார்பெழுத்துகளில் ஒன்று ஃ என்னும் அஃகேனம்.
பிற மொழிச் சொற்கள்
தெரிந்தும் தமிழ்ச் சொற்களுக்கு ஈடாக பிற மொழிச் சொற்களை பயன்படுத்த வேண்டாம். தெரியாமல் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் பிற பயனர்கள் பரிந்துரைப்பர், அல்லது மாற்றி எழுதுவர். எடுத்துக்காட்டுக்கள்: கம்பியூட்டர் - கணினி, இண்டர்னட்-இணையம், சைக்கிள்-மிதிவண்டி.
சாய்வு எழுத்துக்களை, பிற மொழி சொற்றொடர் கொடுக்கும் போதும், சில தமிழில் இன்னும் சேர்க்கப்படாத ஒரு சில பிறமொழி சொற்கள் கொடுக்கும் போதும், பயன்படுத்துக. தமிழ்மயப் படுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களை அந்த சந்தர்பங்களில் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு: ஜப்பானிய மொழியில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஹிரகானா, கடகானா, கஞ்சி, சில சமயம் ரோமாஜி எழுத்துரு அறிவு தேவைப் படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் சேர்க்கப் பட்டுள்ள பிற மொழி சொற்களை எழுதும் போது, சாய்வு முறையை பயன்படுத்தக் கூடாது - எடுத்துக்காட்டு டி. என். ஏ பாலிமரேசு, கடோலினியம், பெர்ள், தாலிபான். இதில் ஒரு குறுக்கு வழி, தமிழ் அகராதிகளில் வரும் சொற்களை சாய்வு படுத்தி எழுதாமல் இருப்பது நன்று. நல்ல தமிழர்விக்கி கட்டுரை எழுதுவது காட்டி படி, பிற மொழிச் சொற்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும், அப்பொழுது அம்மொழியில் அவற்றை எழுதுவதை பக்கத்தில் அடைப்பு குறிகளில் போடலாம்.
மரியாதைச் சொற்கள்
கட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (தமிழர்விக்கியில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), திரு, அவர்கள், மேதகு, செல்வி, என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை (விளியைப்) பரிந்துரைக்கிறோம்.
பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் பேச்சுப்பக்கங்களில் மட்டும் ஒருமையிலோ, அண்ணா, அக்கா, தம்பி என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான தமிழர்விக்கி கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டியதாகும்.
மேற்கோள்கள்
மேற்கோள்களை சாய்வெழுத்தில் இடத் தேவை இல்லை; அதற்கு விதிவிலக்கு புறமொழி வார்த்தைகளை பயன்படுத்துதல், போன்றவையாகும். சில இடங்களில் சில சொற்கள் முதல் நூலில் இருப்பதா, அல்லது அங்குள்ளதை ஒருவர் குறிப்பாக சுட்டுகிறாரா என வேறுபடுத்தி காட்டுவது தேவையாக இருக்கலாம். எ.கா.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. (அழுத்தம் கொடுக்கப்பட்டது)
See also quotation marks.
குறுஞ்சொற்கள்
- எடுத்துக்காட்டு - எ.கா
- பின் குறிப்பு - பி.கு
அடைப்புக் குறிகள்
அடைப்புக் குறிகளுக்குள் வெற்றிடம் விடாமல் எழுதவும்.
எடுத்துக்காட்டு:
சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)
தவறான முறை - சுஜாதா ( எழுத்தாளர் )
அடைப்புக் குறியைத் தொடங்கும் முன் ஒரு வெற்றிடம் விடவும்.
எடுத்துக்காட்டு:
சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)
தவறான முறை - சுஜாதா(எழுத்தாளர்)
அடைப்புக் குறிகளுக்கான மேற்கண்ட வழிமுறைகள் கட்டுரைத் தலைப்புகளுக்கும் பொருந்தும்.
சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்
பொது: சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்
நிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும்.
புணர்ச்சி
பொது: புணர்ச்சி
எழுத்துப்பெயர்ப்பு
பொது: எழுத்துப்பெயர்ப்பு
சொல் தேர்வும் பொருள் தெளிவும்
பொது: சொல் தேர்வும் பொருள் தெளிவும்
பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்
பொது: பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்