ஜோஷ்னா சின்னப்பா
ஜோஷ்னா சின்னப்பா | |
---|---|
புனைப்பெயர்கள் | இந்திய சுவர்ப்பந்தின் சானியா மிர்சா |
தேசம் | இந்தியா |
பிறப்பு | செப்டம்பர் 15, 1986 சென்னை, தமிழ் நாடு |
தொழில்ரீதியாக விளையாடியது | 2003 ஆம் ஆண்டு |
பயிற்சியாளர் | மால்கம் வில்ஸ்ட்ரொப் |
பயன்படுத்தப்படும் மட்டை | வில்சன் |
பெண்கள் ஒற்றையர் | |
அதி கூடிய தரவரிசை | 28 (சூன், 2010) |
தற்போதைய தரவரிசை | 25 (ஏப்ரல், 2013) |
தலைப்பு(கள்) | 7 |
இறுதிச் சுற்று(கள்) | 14 |
கை ஆளுகை | வலது கை |
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஏப்ரல், 2013. |
ஜோஷ்னா சின்னப்பா (ஆங்கிலம்: Joshna Chinappa) 1986 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இந்திய சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ் நாடு, சென்னையில் செப்டம்பர் 15, 1986 ஆம் ஆண்டு அஞ்சன் சின்னப்பா, சுனிதா சின்னப்பா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை முன்னால் சுவர்ப்பந்து வெற்றிவீரராவார், மேலும் தந்தை அஞ்சன் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உள்ளார்.[2]
ஜோஷ்னா சின்னப்பா 2003 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள செபீல்ட்டில் நடைபெற்ற பிரிட்டீஷ் சுவர்ப்பந்து பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. சென்னையிலுள்ள இந்திய சுவர்ப்பந்து கலைக் கழகத்தில் (முன்னாளில் இது ஐசிஎல் (ICL) அகாதமி என்ற பெயரில் இயங்கி வந்தது) பயிற்சிப் பெற்றவராவார், மே 2012 ஆம் ஆண்டு சென்னை திறந்தவெளி சுவர்ப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-4, 11-8, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனின் சாரா ஜானி பெர்ரியை வீழ்த்தினார். மேலும் ஜோஷ்னா தற்போது உலக தரவரிசையில் 25 வது இடத்தில் உள்ளார்.[3]
ஜோஷ்னா சின்னப்பா மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளையின் ₹ நாற்பது கோடித் திட்டத்தின் முதல் பயனாளி ஆவார்.[4]
தலைப்புகள்
- என் எஸ் சி தொடர் எண். ஆறு (சுற்று 12) 2009 - வெற்றியாளர்
- பிரிட்டிசு இளநிலை திறந்த சுற்று, வெற்றியாளர் - (2005)
- 2005ஆம் ஆண்டு ஆசிய இளநிலை வெற்றியாளர்.
- உலக இளநிலை, பெல்ஜியம், 2005 - இரண்டாம் இடம்
- பிரித்தானிய திறந்த சுற்று இளநிலை, 2004 - இரண்டம் இடம்.
- தெற்கு ஆசியா விளையாட்டுகள், பாக்கித்தான், 2004 - தங்கப் பதக்கம்
- ஆங்காங் நிகழ்ச்சி, 2004 - இரண்டாம் இடம்
- ஆசியப் போட்டி வகையகம், 2004 - வெண்கலம்
- மலேசிய இளநிலை, 2004 - வெற்றியாளர்
- இந்திய தேசிய இளநிலை, 2004 - வெற்றியாளர்
- இந்திய தேசிய முதுநிலை. - (2004) - வெற்றியாளர்
தங்கப் பதக்கம்
2014ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்தில் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.[5].
ஆதாரம்
- ↑ "Squash Info Joshana Chinappa". ஸ்குவாஷ் விவரங்கள். 2013. http://www.squashinfo.com/players/402-joshana-chinappa. பார்த்த நாள்: ஏப்ரல் 10, 2013.
- ↑ "சோதனையை வென்ற ஜோஷ்னா!". தினமணி. சூன் 3, 2012. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article867155.ece. பார்த்த நாள்: ஏப்ரல் 10, 2013.
- ↑ "ஜோஷ்னா சின்னப்பா தரவரிசை வரலாறு". http://www.horizonsolutions.tv/entry/wispa/ranking.php?player=T00595. பார்த்த நாள்: 10 மார்ச் 2013.
- ↑ "Press Articles of Joshna Chinappa" இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 27, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927141035/http://www.ispsquash.com/Joshna_MittalChampionTrust.htm#Joshna%20first%20beneficiary%20of%20Lakshmi%20Mittal%27s%20initiative. பார்த்த நாள்: ஏப்ரல் 10, 2013.
- ↑ ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று தமிழக ஜோடி ஜோஷனா-தீபிகா பல்லிக்கல் சாதனை