ஜோசப்பின் மேரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோசப்பின் மேரி
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்Josephine Mary Singarayar
தேசியம்மலேசியர்
பிறப்பு29 சூன் 1967 (1967-06-29) (அகவை 57)
ஈப்போ, பேராக், மலேசியா
உயரம்168 cm
எடை50 kg
விளையாட்டு
விளையாட்டுதட களம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்
கழகம்மலேசிய விளையாட்டுப் பயிற்சியாளர்
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகள விளையாட்டுக்கள்
நாடு  மலேசியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1986 சியோல் {{{3}}}
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1990 பெய்ஜிங் {{{2}}}

ஜோசப்பின் மேரி (பிறப்பு: 29 சூன் 1967); (மலாய்: Josephine Mary; ஆங்கிலம்: Josephine Mary Singarayar) என்பவர் மலேசியாவின் தடகள ஓட்டப் பந்தய வீராங்கனை.

1988-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்

ஜோசப்பின் மேரி, 1967-ஆம் ஆண்டு, மலேசியா, பேராக், ஈப்போ நகரில் பிறந்தவர். ஈப்போ சிலிபின் தார்சிசியன் கான்வெண்ட் பள்ளியில் (Tarcisian Convent Ipoh) தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் பெற்றார்.

பின்னர் டெலவேர் பல்கலைக்கழகத்தில் (University of Delaware), தடகள பயிற்சியில் உயர்க்கல்வியைப் பெற்றார்.[2]

பள்ளியில் படிக்கும் காலத்தில் தட கள போட்டிகளில் சிறந்து விளங்கினார். அத்ன் பின்னர் பேராக் மாநில விளையாட்டுப் போட்டிகள்; மலேசியப் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்; |ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என பல போட்டிகளில் கலந்து கொண்டார்.

ஜோசப்பின் மேரியின் சாதனைகள்

தற்சமயம், பேராக் மாநிலப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகின்றார். தவிர மலேசிய விளையாட்டு மன்றத்தின் (Majlis Sukan Negara Malaysia) தட களப் பயிற்சியாளராகவும் பணி செய்தவர்.

குடும்பத் தகவல்

ஜோசப்பின் மேரியின் கணவர் சாம்சன் வல்லபாய் (Samson Vallabouy). இவரும் மலேசிய, அனைத்துலக ஓட்டப் பந்தய வீரர். 1989-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் (1989 SEA Games) போட்டியில் 1 நிமிடம் 48.29 வினாடிகள் ஓடி தங்கம் வென்றவர்.[3]

ஜோசப்பின் மேரியின் மகள் செரின் சாம்சன் வல்லபாய் (Shereen Samson Vallabouy). இவரும் மலேசிய, அனைத்துலக ஓட்டப் பந்தயத் துறையில் சாதனை படைத்து வருகிறார். மலேசியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றார்.[4]

அமெரிக்காவின் தேசிய கல்லூரிகளுக்கான தடகளச் சங்கம் (US National Collegiate Athletic Association (NCAA), கடந்த 2022 மார்ச் 12-ஆம் தேதி, ஓர் உள்ளரங்கப் போட்டியை நடத்தியது.

அதில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், செரின் சாம்சன் வல்லபாய் 53.79 வினாடிகளைப் பதிவுச் செய்து சாதனை செய்து உள்ளார். இது மலேசியச் சாதனை ஆகும்.[5] மலேசிய மாமன்னரும்; மலேசியப் பிரதமரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.[6]

வெளி இணைப்புகள்

மேற்கோள்

  1. "Olympedia – Josephine Mary Singarayar - 400 metres, Women (Olympic)". http://www.olympedia.org/athletes/73355. பார்த்த நாள்: 17 March 2022. 
  2. "ICECP::International Coaching Enrichment Certificate Program". http://www1.udel.edu/ICECP/participants/2015/singarayar.html. பார்த்த நாள்: 17 March 2022. 
  3. "Samson, who has three SEA Games gold medals, was the country's best 800m runner after B. Rajkumar who still holds the national record". https://www.pressreader.com/malaysia/the-borneo-post/20170816/282299615276075. பார்த்த நாள்: 17 March 2022. 
  4. "நாட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகின்றார் ஷெரீன் சாம்சன் வல்லபௌய்" (in en). 16 March 2022. https://www.bernama.com/tam/news.php?id=2062518. பார்த்த நாள்: 17 March 2022. 
  5. "Daughter Shereen’s rise in athletics monitored since 2019: Ex-athlete Josephine Mary" (in en). 16 March 2022. https://www.thevibes.com/articles/sports/56455/daughter-shereens-rise-in-athletics-monitored-since-2019-ex-athlete-josephine-mary. பார்த்த நாள்: 17 March 2022. 
  6. March 17, Bernama / Bernama (17 March 2022). "King, Queen congratulate Shereen Vallabouy for stunning 400m win" இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220316170908/https://www.theedgemarkets.com/article/king-queen-congratulate-shereen-vallabouy-stunning-400m-win. பார்த்த நாள்: 17 March 2022. 
"https://tamilar.wiki/index.php?title=ஜோசப்பின்_மேரி&oldid=24035" இருந்து மீள்விக்கப்பட்டது