ஜோசப்பின் மேரி
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | Josephine Mary Singarayar | ||||||||||||||||
தேசியம் | மலேசியர் | ||||||||||||||||
பிறப்பு | 29 சூன் 1967 ஈப்போ, பேராக், மலேசியா | ||||||||||||||||
உயரம் | 168 cm | ||||||||||||||||
எடை | 50 kg | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
விளையாட்டு | தட களம் | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | 400 மீட்டர் | ||||||||||||||||
கழகம் | மலேசிய விளையாட்டுப் பயிற்சியாளர் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
ஜோசப்பின் மேரி (பிறப்பு: 29 சூன் 1967); (மலாய்: Josephine Mary; ஆங்கிலம்: Josephine Mary Singarayar) என்பவர் மலேசியாவின் தடகள ஓட்டப் பந்தய வீராங்கனை.
1988-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்
ஜோசப்பின் மேரி, 1967-ஆம் ஆண்டு, மலேசியா, பேராக், ஈப்போ நகரில் பிறந்தவர். ஈப்போ சிலிபின் தார்சிசியன் கான்வெண்ட் பள்ளியில் (Tarcisian Convent Ipoh) தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் பெற்றார்.
பின்னர் டெலவேர் பல்கலைக்கழகத்தில் (University of Delaware), தடகள பயிற்சியில் உயர்க்கல்வியைப் பெற்றார்.[2]
பள்ளியில் படிக்கும் காலத்தில் தட கள போட்டிகளில் சிறந்து விளங்கினார். அத்ன் பின்னர் பேராக் மாநில விளையாட்டுப் போட்டிகள்; மலேசியப் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்; |ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
ஜோசப்பின் மேரியின் சாதனைகள்
- 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 800 மீட்டர் - வெண்கலம்
- 1988 சியோல் ஒலிம்பிக் விளையாட்டுகள் - 800 மீட்டர் - 4-ஆம் இடம்
- 1990 பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 4×400 மீட்டர் - வெண்கலம்
தற்சமயம், பேராக் மாநிலப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகின்றார். தவிர மலேசிய விளையாட்டு மன்றத்தின் (Majlis Sukan Negara Malaysia) தட களப் பயிற்சியாளராகவும் பணி செய்தவர்.
குடும்பத் தகவல்
ஜோசப்பின் மேரியின் கணவர் சாம்சன் வல்லபாய் (Samson Vallabouy). இவரும் மலேசிய, அனைத்துலக ஓட்டப் பந்தய வீரர். 1989-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் (1989 SEA Games) போட்டியில் 1 நிமிடம் 48.29 வினாடிகள் ஓடி தங்கம் வென்றவர்.[3]
ஜோசப்பின் மேரியின் மகள் செரின் சாம்சன் வல்லபாய் (Shereen Samson Vallabouy). இவரும் மலேசிய, அனைத்துலக ஓட்டப் பந்தயத் துறையில் சாதனை படைத்து வருகிறார். மலேசியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றார்.[4]
அமெரிக்காவின் தேசிய கல்லூரிகளுக்கான தடகளச் சங்கம் (US National Collegiate Athletic Association (NCAA), கடந்த 2022 மார்ச் 12-ஆம் தேதி, ஓர் உள்ளரங்கப் போட்டியை நடத்தியது.
அதில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், செரின் சாம்சன் வல்லபாய் 53.79 வினாடிகளைப் பதிவுச் செய்து சாதனை செய்து உள்ளார். இது மலேசியச் சாதனை ஆகும்.[5] மலேசிய மாமன்னரும்; மலேசியப் பிரதமரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.[6]
வெளி இணைப்புகள்
- ஜோசப்பின் மேரி படங்கள்
- 2017-ஆம் ஆண்டில் ஜோசப்பின் மேரி; டி.எச். ராகா வானொலியின் நேரலைக் காணொலி
- ஜோசபின் மேரி சிங்கராயர் வாழ்க்கை வரலாறு
மேற்கோள்
- ↑ "Olympedia – Josephine Mary Singarayar - 400 metres, Women (Olympic)". www.olympedia.org. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "ICECP::International Coaching Enrichment Certificate Program". www1.udel.edu. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "Samson, who has three SEA Games gold medals, was the country's best 800m runner after B. Rajkumar who still holds the national record". www.pressreader.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "நாட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகின்றார் ஷெரீன் சாம்சன் வல்லபௌய்". BERNAMA (in English). 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "Daughter Shereen's rise in athletics monitored since 2019: Ex-athlete Josephine Mary". The Vibes (in English). 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ March 17, Bernama / Bernama (17 March 2022). "King, Queen congratulate Shereen Vallabouy for stunning 400m win". The Edge Markets. Archived from the original on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)