ஜோ அபேவிக்கிரம

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோ அபேவிக்கிரம
பிறப்புசூன் 22, 1927
லெல்லுப்பிட்டி, இரத்தினபுரி மாவட்டம், இலங்கை
இறப்பு21 செப்டம்பர் 2011(2011-09-21) (அகவை 84)
தேசியம்இலங்கை இலங்கையர்

ஜோ அபேவிக்கிரம (Gammana Patabendige Don John Abeywickrama, சூன் 22, 1927 - செப்டம்பர் 21 2011), பிரபல சிங்களத் திரைப்பட நடிகராவார். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் நடித்துப் புகழ் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்தவர் அபேவிக்கிரம. இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

திரைப்படத்துறையில்

இவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி, இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957 இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.

பிற துறைகள்

1959 இல் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் 'ஒதேலோ' நாடகத்தை நடித்து மேடை நாடகத்துறையில் அறிமுகமான இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையில் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

இலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். ஜோ அபேவிக்கிரம 11 தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

சரசவிய விருது

  • 1965 சரசவிய விருது (திரைப்படம் - கெடவரயோ)
  • 1966 ஜனரஞ்ச மற்றும் சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சாரவிட)
  • 1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)
  • 1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)
  • 1986 சரசவிய உயர் விருது
  • 1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மல்தெனியோ சிமியோன்)
  • 1991 சிறந்த துணை நடிகர் (திரைப்படம் - பாலம யட்ட)
  • 1992 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - கொலு முகுதே குனாட்டுவ)
  • 1993 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - உமயாங்கனா)
  • 1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - வித்துசித்துவம்)
  • 2002 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - (புர ஹந்த கலுவர)

சனாதிபதி விருது

திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும், திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக சனாதிபதி விருதினை இவர் 7 தடவைகள் பெற்றுள்ளார்.

  • 1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)
  • 1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)
  • 1982 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)
  • 1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)
  • 1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பூஜா)
  • 1996 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - லொக்கு துவ)
  • 1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - விது சிதுவம்)

சர்வதேச விருது

1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.

இறப்பு

ஜோ அபேவிக்கிரம தனது 84 ஆவது வயதில் செப்டம்பர் 21 2011 காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நடித்துள்ள திரைப்படங்கள்

இப் பட்டியலிலுள்ள பெயர்கள் சிங்கள மொழி உச்சரிப்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1957 சரதம காவல்அதிகாரி
1959 அவிஸ்வாசய
1959 சிறி 296
1959 கெஹனு கீத
1959 சிறிமலீ
1960 நாலங்கன
1960 பிரிமியக் நிசா
1961 தருவா காகேத
1962 ரன்முது துவ
1962 தேவ சுந்தரி
1963 வெனா ஸ்வர்கயக் குமடத
1963 தீபசிகா
1964 ஹெட்ட பிரமாத வெடி
1964 கெட்டவரயோ சீமனாரிஸ்
1964 சுபசரண செமசித
1964 சிதக மஹிம
1965 சண்டியா
1965 சதுட்டு கந்துலு
1965 சாரவிட சரய்யா
1965 ஹிதட ஹித
1965 அல்லபு கெதர
1965 சத பனஹ
1965 சுவீப் டிக்கட்
1965 லந்தக மஹிம மொஹான்
1966 செங்கவன செவனெல்ல
1966 மஹதென முத்தா பொல்பெமுனா
1966 செனசும கொதனத
1966 எதுல்வீம தஹனம்
1966 சீகிரி காசியப்பா
1966 கபட்டிகம
1966 பரசது மல்
1967 சொருங்கெத் சொரு
1967 மணமாலயோ
1967 தரு துக
1967 செந்து கந்துலு
1968 புஞ்சி பபா சேன
1968 அக்கா நகோ
1968 எமதிகம முதலாளி
1968 'தஹசக் சிதுவிலி
1968 ஆதரவந்தயோ
1968 அட்டவெனி புதுமய
1969 செனேஹச
1969 ஒப நெதினம்
1969 நாரிலதா
1969 ஹரி மக
1969 படுத் எக்கா ஹொரு
1969 உதும் ஸ்த்ரீ
1969 பரிஸ்சம் வென்ன
1969 பரா வளலு
1969 பெஞ்சா
1969 ரோமியோ ஜுலியட் கதாவ
1970 லக்செத கொடிய
1970 தேவத்தா
1970 துன் மங் ஹந்திய அபிலின்
1971 சீயே நொட்டுவ
1971 வெலிகதர கொரிங் முதலாளி
1971 ஹரலக்சய
1972 Chandar, the Black Leopard of Ceylon ஃபாதர்
1972 வீதுரு கெவல்
1973 மாத்தர ஆச்சி
1973 துசாரா
1973 சதஹட்டம ஒப மகே
1974 கல்யாணி கங்கா
1974 ஒன்ன பாபு பில்லோ எனவா
1974 நியகலா மல்
1975 ரத்தரன் அம்மா
1975 தரங்கா
1974 சூரயா சூரயாமய்
1975 சிகுருலியா
1975 சாதனா
1975 கலு திய தஹரா
1975 தேச நிசா
1976 வாசனா
1976 மடோல் தூவ தலைமை ஆசிரியர்
1976 கொலம்ப சன்னிய
1976 த கோட் கிங் சுவாமி
1976 உன்னத் தஹாய் மலத் தஹாய்
1976 ஒன்ன மாமே கெல்லா பெனப்பி
1977 ஹிதுவொத் ஹிதுவாமய்
1977 யலி இபதி
1977 சிறிபால ஹா ரன்மெனிகா
1978 கெஹனு லமய்'
1978 சிறிபதுல
1978 செலினாகே வளவ்வ
1978 சாரா
1978 வீர புரான் அப்பு கொங்கல்ல கொடபண்டா
1978 பம்பரு அவித் அன்டன் அய்யா
1978 சல்லி
1978 குமர குமரியோ தர்மே
1978 சந்தவட்ட ரன்தரு
1979 ஜீவன கந்துலு
1979 ஹிங்கன கொல்லா
1979 ரஜ கொல்லோ
1979 வசந்த தவசக்'
1979 விசி ஹதர பெய
1979 ஹரி புதுமய்
1980 டக் டிக் டுக்
1980 ஜோடு வலலு
1980 எக்டெம் கே வில்சன்
1980 சீதா
1980 ஆதர ரத்னே
1980 சிறிபோ அய்யா சிறிபோ அய்யா
1980 பம்பர பஹச
1980 தன்டு மொனரா
1980 முவன் பெலஸ்ஸ 2
1980 பர திகே
1980 சிங்ஹபாகு
1981 கோலம் காரயோ
1981 தரங்க
1981 பத்தேகம சிலிந்து
1981 சயுரு தெரே
1981 சொல்தாது உன்னஹே இராணுவ வீரர்
1981 சத்தர பெர நிமிதி
1981 பின்ஹாமி
1981 சதர திகந்தய
1982 ரேன கிரவய் டாக்டர் சிறி
1982 வதுர கரத்தய
1982 மாஜர் சேர்
1982 கெலே மல்
1982 மலட நெஎன பம்பரு
1982 ரேல் பார
1982 கடவுனு பொரந்துவ
1983 ரன் மினி முத்து
1983 சந்தமாலி
1983 சுமித்ரோ
1983 நிலியகட பெம் கலெமி
1983 சமுகனிமி மா செமியனி
1983 சுபோதா
1983 முவன் பெலஸ்ஸ 3
1983 மொனர தென்ன 2
1983 பீட்டர் ஒப் த எலிபன்ட்ஸ்
1983 முகுது லிஹினி
1984 சிராணி
1984 தாத்தை புதாய்
1984 பொடி ராலாஹாமி பொடி ராலஹாமி
1984 சசரா சேதனா
1984 வடுல
1984 ஹிம கதர
1984 சாகோதரியகே கதாவ
1985 சுத்திலாகே கதாவ
1986 மல்தெனிய சீமன்
1986 தெவ் துவ மொஹமட்
1986 பூஜா ஜேமிஸ்
1986 ஆதர ஹசுன
1987 விராகயா அரவிந்த'ஸ் பாதர்
1988 ரச ரஹசக்
1988 அங்குலிமாலா திசாபாமுக்
1990 பாலம யட்ட அங்கல்
1991 கொலு முகுதே குனாட்டுவக் பொடி
1991 செரியோ டொக்டர் பிரதான மருத்துவர்
1991 ஸ்திரீ அப்புஹாமினி
1992 உமயங்கனா இளைய சதோதரர்
1994 அம்பு செமியோ டாக்டர்
1995 அவரகிர கே.பி.
1995 ச்செரியோ கப்டன் கப்டன் டாசன்
1996 ஹித்த ஹொந்த கெஹெனியக்
1996 லொகு துவ புன்னா'ஸ் பாதர்
1996 செரியோ டார்லிங் சீப்
1996 பிது சிதுவம் சேனக
1997 சுது அக்கா பிலக்ஸ்மித்
1998 விமுக்தி
2000 சரோஜா டாக்டர்
2001 புர ஹந்த கலுவர -
2001 அஸ்வசுவம குனேர்ஸ்
2006 தீவாரி முதலாளி


வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜோ_அபேவிக்கிரம&oldid=28509" இருந்து மீள்விக்கப்பட்டது