ஜானி (2003 திரைப்படம்)
ஜானி | |
---|---|
இயக்கம் | பவன் கல்யாண் |
தயாரிப்பு | அல்லு அரவிந்த் |
கதை | பவன் கல்யாண் |
இசை | ரமண கோகுலா |
நடிப்பு | பவன் கல்யாண், ரேனு தேசாய், ரகுவரன் |
ஒளிப்பதிவு | சொட்ட K. நாயுடு |
விநியோகம் | Geeta Arts |
வெளியீடு | ஏப்ரல் 26 2003 |
மொழி | தெலுங்கு |
ஜானி, 2003 இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கிய பவன் கல்யாணே இத்திரைப்படத்தின் கதாநாயகனுமாவார். மேலும் இவரது மனைவி ரேனு தேசாய் இவருக்கு இணையாக இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஜானி தனது சிறு வயதிலேயே தாயாரை இழந்தவனாவான். தனது தாயாரின் இழப்பிற்குப் பின்னரும் குடிகாரனாகவும், புகைப் பிடிப்பவருமாக இருக்கும் தனது தந்தையை விட்டு ஓடிச்செல்கி்றான். சிறிது காலம் கழித்து தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஜானி தற்செயலாக கீதாவைச் சந்திக்கின்றான். கீதாவை காதலித்து மணம் செய்து கொள்ளும் ஜானி கீதாவிற்கு புற்று நோய் இருப்பதனை அறிந்து கொள்கிறான். கீதாவின் வைத்தியச் செலவுகளுக்கு பணம் தேவைப்பட்ட காரணத்தின்படி, ஜானி குத்துச்சண்டை போட்டு அதில் வரும் பணத்தினைக் கொண்டு கீதவைக் காப்பாற்றுகின்றான்.
மேற்கோள்கள்
- ↑ "Movie Review - Johnny". 25 April 2003. https://www.idlebrain.com/movie/archive/mr-johnny.html.
- ↑ Vijayalaxmi (23 April 2003). "Pawan Kalyan sets a record". https://www.rediff.com/movies/2003/apr/23pawan.htm.
- ↑ "Pawan Kalyan and Renu Desai's Johnny completes 17 Years today". The Times of India. 2020-04-28. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/pawan-kalyan-and-renu-desais-johnny-completes-17-years-today/photostory/75373720.cms. "Its most significant accomplishment was being the first Telugu movie to be released with over 250 prints worldwide, including the United States."