ஜமீன் கோட்டை
ஜமீன் கோட்டை | |
---|---|
இயக்கம் | ராமச்சந்தர் |
தயாரிப்பு | பொன். குமார் |
கதை | கலைப்புலி ஜி. சேகரன் |
இசை | சிற்பி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரவீந்தர் |
படத்தொகுப்பு | லட்சுமி சங்கர் |
கலையகம் | திரைப்பறவை |
வெளியீடு | திசம்பர் 14, 1995 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜமீன் கோட்டை (Jameen Kottai) 1995 ஆம் ஆண்டு கலைப்புலி ஜி. சேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து வெளியான தமிழ் திரைப்படம். ராமச்சந்தர் இயக்குனராகவும், சிற்பி இசையமைப்பாளராகவும் பணியாற்றிய இப்படத்தை பொன். குமார் தயாரித்தார்[1][2][3].
கதைச்சுருக்கம்
ஜமீன் கோட்டையானது பாழடைந்த ஒரு கட்டிடம் ஆகும். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அதனை மர்மங்கள் நிறைந்த கட்டிடமாகக் கருதி அதனருகே செல்வதைத் தவிர்க்கின்றனர்.
மாடசாமி (கலைப்புலி ஜி. சேகரன்) பூட்டு தயாரிக்கும் தொழில் செய்கிறார். அவனுடைய தங்கை ராஜேஸ்வரியுடன் வசிக்கிறார். அந்த கிராமத்தில் பணியாற்றும் மருத்துவர் வசந்தும் ராஜேஸ்வரியும் காதலிக்கின்றனர். அவர்களின் காதலைப் பற்றி அறியும் மாடசாமி அவர்கள் திருமணத்திற்கு ஏற்படாது செய்கிறான். ஆனால் வசந்தின் பெற்றோர்கள் அந்தத் திருமணத்திற்காக அதிகமான வரதட்சணை எதிர்பார்க்கின்றனர். தன் தங்கையின் நல்வாழ்க்கையைக் கருதி அவர்கள் கேட்கும் வரதட்சணையைக் கொடுப்பதற்கு சம்மதிக்கிறான் மாடசாமி. நகரத்திற்கு சென்று வேலை செய்தால் அதிக ஊதியம் பெற்று தன் தங்கையின் திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேமிக்கலாம் என்றெண்ணுகிறான் மாடசாமி. பிரகாஷ் (பயில்வான் ரங்கநாதன்) மற்றும் மாணிக்கம் இருவரும் மாடசாமியை சந்தித்து ஜமீன் கோட்டையில் உள்ள ஒரு பெட்டகத்தைத் திறக்க உதவி செய்தால் அதற்குப் பணம் தருவதாகக் கூற அவர்களுடன் ஜமீன் கோட்டைக்கு செல்ல முடிவெடுக்கிறான்.
மூவரும் உள்ளே ஜமீன் கோட்டைக்குள் செல்கின்றனர். மாடசாமி அங்குள்ள பெட்டகத்தின் பூட்டைத் திறக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்கிறான் மாடசாமி. அப்பெட்டகத்தில் அங்குள்ள புதையலை அடைவதற்கான வழிமுறைகள் அடங்கிய குறிப்புகள் உள்ளது. அதன்படி ஒரு பவுர்ணமி நாளில் மீண்டும் அந்தக் கோட்டைக்குள் வரும் பிரகாஷ் மற்றும் மாணிக்கம் புதையலைக் கண்டுபிடிக்கின்றனர். புதையலைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள என்னும் பிரகாஷ் மாணிக்கத்தைத் தாக்கி படுகாயப்படுத்துகிறான். திடீரென அங்கு வரும் அமானுஷ்ய உருவம் பிரகாஷைக் கொல்கிறது. ஜமீன் கோட்டையை விட்டு வெளியேறும் அந்த அமானுஷ்ய உருவம் ராஜேஸ்வரியின் உடலில் புகுந்துவிடுகிறது. அம்மனூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் பத்ரகாளி என்ற தெய்வம் அந்த அமானுஷ்யத்திடமிருந்து ராஜேஸ்வரியையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவதாக திரைப்படம் முடிகிறது.
நடிகர்கள்
- கலைப்புலி ஜி. சேகரன் - மாடசாமி
- சீதா - ராஜேஸ்வரி
- ரா. சங்கரன்
- கிங்காங்
- பி. ஆர். வரலக்ஷ்மி - சுஜாதா
- பயில்வான் ரங்கநாதன் - பிரகாஷ்
- பூபதி ராஜா - சூலையா
- என்னத்த கன்னையா - சோதிடர்
- ராஜ்குமரேஷ்
- ராஜகோபி
- ராஜதேவ்
- சின்னய்யா
- கல்பனா
- எம். ரத்னகுமார்
- தர்மா
- ஜெயப்ரகாஷ்
- வேலூர் விஜயகுமார்
- பாபு
- வாமன் மாலினி
- மோகினி - சிறப்புத் தோற்றம்
இசை
படத்தின் இசையமைப்பாளர் சிற்பி. பாடலாசிரியர் காளிதாசன்[4][5][6].
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | மணிச்சிட்டு | பி. உன்னிகிருஷ்ணன் | 4:26 |
2 | மண்ணளந்த | சித்ரா | 5:16 |
3 | நான் பாடும் | சுவர்ணலதா, அமுதா | 4:37 |
4 | சிரிக்க வாங்க | அருண்மொழி | 4:38 |
5 | பொண்ணுக்குள்ள | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் | 4:08 |
மேற்கோள்கள்
- ↑ "ஜமீன்கோட்டை". http://spicyonion.com/movie/jameenkottai/.
- ↑ "ஜமீன்கோட்டை" இம் மூலத்தில் இருந்து 2017-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171110004937/http://www.gomolo.com/jameen-kottai-movie/11973.
- ↑ "ஜமீன்கோட்டை" இம் மூலத்தில் இருந்து 2010-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101215202435/http://www.jointscene.com/movies/kollywood/Jameen_Kottai/7861.
- ↑ "பாடல்கள்". http://play.raaga.com/tamil/album/Jameen-Kottai-songs-T0003835.
- ↑ "ஜமீன்கோட்டை". https://itunes.apple.com/gb/album/jameen-kottai-original-motion/id1047692460.
- ↑ "பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2018-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180919105703/http://mio.to/album/Jameen+Kottai+(1995).