சோமலதா சுபசிங்கே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோமலதா சுபசிங்க
பிறப்பு(1936-07-02)2 சூலை 1936
கம்பகா, இலங்கை
இறப்பு30 மே 2015(2015-05-30) (அகவை 78)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
கல்விபேராதனைப் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகை
  • திரைக்கதை எழுத்த்தாளர்
  • நாடக இயக்குநர்
  • ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
லியோனல் பெர்னாண்டோ
பிள்ளைகள்கௌசல்யா பெர்னாண்டோ, சியாமளிகா நாணயக்கார
உறவினர்கள்டி. டபிள்யு சுபசிங்க (சகோதரர்)
விருதுகள்

கலாசூரி சோமலதா சுபசிங்க (Somalatha Subasinghe; சிங்களம்: සෝමලතා සුබසිංහ; 2 சூலை 1936 – 30 மே 2015) இலங்கையைச் சேர்ந்த நடிகையும், நாடக ஆசிரியரும், நாடக இயக்குனரும், கல்வியாளரும் ஆவார்.[1] இலங்கை நாடகத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக கலாசூரி மற்றும் கலா கீர்த்தி இரண்டையும் பெற்றார்.

சுயசரிதை

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

சோமலதா சுபசிங்கே 2 சூலை 1936 அன்று கம்பகாவில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு தலைமை ஆசிரியராகவும், இவரது தாயார் ஒரு ஆசிரியராகவும் இருந்தனர். இவர் முசேயஸ் கல்லூரியிலும் பின்னர் பௌத்த பெண்கள் கல்லூரியிலும் படித்தார். தனது உயர்கல்வித் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின்னர், இவர், 1958 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் நுழைந்து தனது பட்டப்படிப்புக்காக சிங்களம், பொருளாதாரம் மற்றும் வரலாற்றைப் படித்தார்.[2]

சுபசிங்கே 1962இல் இலங்கையின் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியராக சேர்ந்தார்.[3] இவர் 1970களின் நடுப்பகுதியில் கொழும்பு நாளந்தா கல்லூரியில் நாடகத்தைக் கற்பித்தார்.[4]

குடும்பம்

1962ஆம் ஆண்டில், சோமலதா மலேசியா, நெதர்லாந்து மற்றும் பிரான்சுக்கான இலங்கையின் தூதராக செயல்பட்ட லியோனல் பெர்னாண்டோவை மணந்தார்.[2] இவர்களுக்கு கௌசல்யா பெர்னாண்டோ, சியாமளிகா நானயக்கார உட்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர். கௌசல்யா டாக்டர் சந்தனா அளுத்கே என்பவரை மணந்தார்.[5] டி. டபிள்யு சுபசிங்கே என்ற ஒரு சகோதரர் இவருக்கு உள்ளார்.

சோமலதா சுபசிங்கே 30 மே 2015 அன்று இலங்கையின் கொழும்பில் இறந்தார்.[6]

தொழில்

நாடகங்களில் ஈடுபாடு

சிறு வயதிலிருந்தே கலை மற்றும் இசையில் ஆர்வம் காட்டிய இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே மேடை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் பாத்திரம், 24 வயதில், ஒரு வயதான பெண்ணின் கதாபாத்திரம், எடிரிவீர சரச்சந்திராவின் 'ரத்தரன்' என்ற நாடகத்தின் ஒரே பெண் கதாபாத்திரமாக இருந்தது.[7][8] சரச்சந்திரா இவரை நடிப்புத் தொழிலைக் கருத்தில் கொள்ள ஊக்குவித்தார். மேலும், வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு பெற்றார்.[9]

இவர் 1981இல் இலங்கை குழந்தைகள் மற்றும் இளைஞர் நாடக அறக்கட்டளையை நிறுவினார்.[10]

இலங்கை நாடகத்தில் சோமலதா சுபாசிங்கேவின் ஈடுபாடு ஒரு நடிகையாகவும் பின்னர், தனது சொந்த தயாரிப்புகளின் திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் இருந்தது [9][11] குணசேன கலாபதியின் முது புத்து நாடகத்தில் இவர் சாராவாக தோன்றியபோது, இவர் தனது சொந்த பாடல்களை தாளம் மற்றும் இசையுடன் பாடினார்.[11] இந்த நாடகம், கார்சியா லோர்காவின் எர்மாவின் தழுவல் ஆகும்.[1] இப்போது குழந்தைகளால் பாடப்படும் நன்கு அறியப்பட்ட பாடலை உள்ளடக்கி இருந்தது.

திரைப்படங்கள்

இவர், விரகயா, மடோல் துவா, மகாகேதரா, திலகா சஹா திலகா, மே மகே, சுது களுவாரா மற்றும் சிரிபோ ஐயா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.[12]

தொலைக்காட்சி நாடகங்கள்

இவர், எல்ல லங்கா வலவ்வா, கம்பேரலிய மற்றும் சுபா அனகதயக் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார்.[6]

விருதுகளும் மரியாதையும்

இவர், மாநில நாடக விழாக்களில் யாதம் மேடை நாடகத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு தயாரிப்பு விருதுகளையும், ஆன்டிகோன் நாடகத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றார்.[3] இவர் தேசிய கலாசூரி விருதுடன் அங்கீகரிக்கப்பட்டார். 15 நவம்பர் 2005 அன்று நாடகங்களில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு கலாகீர்த்தி விருது வழங்கப்பட்டன.[13]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "She opened a magical chapter for children’s drama". The Sunday Times. 2011. http://www.sundaytimes.lk/111127/Plus/plus_02.html. 
  2. 2.0 2.1 "Somalatha’s significance". The Sunday Observer. 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150620063726/http://www.sundayobserver.lk/2015/06/14/spe-per-02.asp. 
  3. 3.0 3.1 "Veteran dramatist Somalatha Subasinghe's funeral today". News.lk. 2015 இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150725102335/http://www.news.lk/news/sri-lanka/item/7946-veteran-dramatist-somalatha-subasinghe-s-funeral-today. 
  4. "ස්‌කෝලෙට යක්‌ බෙරයක්‌ ගන්නත් නාට්‍ය පෙන්නුවා ගාමිණී හෙට්‌ටිආරච්චි අතීතාවර්ජනය" இம் மூலத்தில் இருந்து 2019-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190904212646/http://www.divaina.com/2012/11/25/cineart02.html. 
  5. "Somalatha Subasinghe plays multiple roles on ‘Celeb Chat’". Sunday Times. April 24, 2011. http://www.sundaytimes.lk/110424/Magazine/sundaytimestvtimes_3.html. பார்த்த நாள்: 27 August 2015. 
  6. 6.0 6.1 "Veteran dramatist Somalatha Subasinghe passes away". The Daily Mirror. 2015. http://www.dailymirror.lk/74367/veteran-dramatist-somalatha-subasinghe-passes-away#sthash.ldRgJM4S.dpuf. 
  7. "Multi-faceted theatre personality Somalatha Subasinghe". The Sunday Observer. 2001 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924132307/http://www.sundayobserver.lk/2011/12/04/mon25.asp. 
  8. "Successful survival". Ceylon Today. 2012 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923202329/http://www.ceylontoday.lk/18-14644-news-detail-successful-survival.html. 
  9. 9.0 9.1 "Multi-faceted theatre personality Somalatha Subasinghe". The Sunday Observer. 2001 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924132307/http://www.sundayobserver.lk/2011/12/04/mon25.asp. "Multi-faceted theatre personality Somalatha Subasinghe" பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். The Sunday Observer. 2001. Retrieved 27 July 2015.
  10. "Somalatha Subasinghe; Pioneer of children’s theatre". Sunday Times. 2015. http://www.sundaytimes.lk/150607/magazine/somalatha-subasinghe-pioneer-of-childrens-theatre-151742.html. 
  11. 11.0 11.1 "Somalatha Subasinghe: Creator of quality children's entertainment". The Sunday Observer. 16 November 2008 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110122162113/http://www.sundayobserver.lk/2008/11/16/jun03.asp. 
  12. "Actress Somalatha Subasinghe passes away". News First. 2015 இம் மூலத்தில் இருந்து 31 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150731100927/http://newsfirst.lk/english/2015/05/actress-somalatha-subasinghe-passes-away/97609. 
  13. "National Honours" இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924121026/http://www.sundayobserver.lk/2005/11/20/new27.html. பார்த்த நாள்: 27 August 2015. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சோமலதா_சுபசிங்கே&oldid=28501" இருந்து மீள்விக்கப்பட்டது