செரினா வகாப்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செரினா வகாப்
Zarina Wahab at the Stardust Awards 2016 (01) (cropped).jpg
2016இல் ஸ்டார்டஸ்ட் விருதுகள் விழாவில் செரினா வகாப்
பிறப்பு17 சூலை 1956 (1956-07-17) (அகவை 68)
விசாகப்பட்டினம், ஆந்திரா மாநிலம் இந்தியா
தேசியம்இந்தியாn
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1974 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஆதித்யா பன்ச்சோலி (தி. 1986)
பிள்ளைகள்சூரஜ் பன்ச்சோலி
சனா பன்ச்சோலி

செரினா வகாப் (Zarina Wahab), ஜூலை 17, 1956இல் பிறந்த ஓர் இந்திய நடிகை ஆவார். இவர், "சித்சோர்", "கோபால் கிருஷ்ணா"(1979), போன்ற படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் அறியப்படுகிறார். மேலும் இவர், மலையாளத் திரைப்படங்களான பருவ மழை (திரைப்படம்), "சாமரம்", "பாலங்கள்" மற்றும் ஆதாமிண்டெ மகன் அபூ போன்றவற்றில் நடித்துள்ளார்.

இளமைப்பருவம்

வகாப், ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவர் சரளமாக தெலுங்கு,[1] உருது (இவரின் தாய்மொழி), இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றவர். இவர் புனேயில் உள்ள பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்.[2] வகாபிற்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர்.

தொழில்

திரைப்பட தயாரிப்பாளரான (இந்தி நடிகர்) ராஜ் கபூரிடமிருந்து இவரது தோற்றத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பெற்றபின், வகாப் அவரது தோற்றத்தில் கவனம் செலுத்தினார். மேலும் திரைப்பட விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் இறுதியில் கவனிக்கப்பட்டு படங்களில் நடிக்கத்தொடங்கினார்.[3] இவர், பெரும்பாலான படங்களில், இயற்கை அழகுடன் கூடிய நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், பாசு சட்டர்ஜியின் "சித் சோர்" (1976), அதைத்தொடர்ந்து, அமோல் பலேக்கர்-விஜயேந்திரா நடித்த "அகர்", ராஜ் பாபர் நடித்த "சஜ்பாட்", அருண் கோவில் நடித்த "சவான் கோ ஆனெ டோ" மற்றும் விக்ரம் நடித்த "ரயீஸ் சாடா" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 1977இல் வெளிவந்த "கரோன்டா" திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[4] இவர், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2009இல் வெளியான "காலெண்டர்" திரைப்படம் மூலம் மலையாள படவுலகிற்கு மீண்டும் வந்தார்.[5] இவர் தொடர்ச்சியாக பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இவர் நடித்த ஆதாமிண்டெ மகன் அபூ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.[6] "மை நேம் இஸ் கான்" இந்திப் படத்தில் ரிஸ்வான் கானுக்கு (சாருக் கான் கதாபாத்திரம்) தாயாக நடித்துள்ளார்.[7]

வகாப் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில், வயதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.[8]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செரினா_வகாப்&oldid=23583" இருந்து மீள்விக்கப்பட்டது