செக்கச்சிவந்த வானம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செக்கச்சிவந்த வானம்
சுவரொட்டி
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்
கதைமணிரத்னம்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅரவிந்த்சாமி
சிம்பு
விஜய் சேதுபதி
அருண் விஜய், பிரகாஷ் ராஜ்
பாடலாசிரியர்வைரமுத்து
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
வெளியீடுசெப்டம்பர் 28, 2018 (2018-09-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செக்கச்சிவந்த வானம் (Sekka Sivantha Vaanam) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான்னால் இயற்றப்பட்ட இசை மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 27, 2018 அன்று வெளியானது.[1][2] இது கொரிய மொழியில் வெளியான New World திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.[3]

கதைக்களம்

பிரகாஷ் ராஜ் ஒரு தாதா. குற்றத் தொழில்களைத் தனது அடியாட்கள் படையைக் கொண்டு செய்து முடிப்பவர். அவரைக் கொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள். பிரகாஷ் ராஜின் மகன்களாக வரும் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர். கதைப்படி, அரவிந்த்சாமி அப்பாவின் வலதுகரமாக இருக்கிறார். அருண் விஜய் துபாயில் ஒரு வணிகராக இருக்கிறார். சிம்பு செர்பியாவில் ஆயுதக் கடத்தல் செய்கிறார். பிரகாஷ் ராஜ் மாரடைப்பில் இறக்க அவரின் இடத்தை அரவிந்த்சாமி பிடிக்கிறார். இதன் காரணமாக கோபமடைந்த அருண்விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் அரவிந்த்சாமியை ஆட்டம் காண வைக்க முயற்சிக்கிறார்கள். அப்பாவின் இடத்தை அரவிந்த்சாமி தக்க வைத்துக் கொண்டாரா? இழந்தாரா? என்பதே மீதிக் கதையாகும்.[4][5]

நடிப்பு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செக்கச்சிவந்த_வானம்&oldid=33533" இருந்து மீள்விக்கப்பட்டது