சூ. செல்லப்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சூ. செல்லப்பா (பிறப்பு: மே 9, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமாவார். தூத்துக்குடி மாவட்டம் கோட்டுரில் பிறந்த இவர் ஆந்திராவில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழில் 12 நூல்களையும், தெலுங்கில் ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "இந்திர காவியம் அல்லது நான்மறை விளக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=சூ._செல்லப்பா&oldid=4255" இருந்து மீள்விக்கப்பட்டது