சுந்தர பாண்டியன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுந்தர பாண்டியன்
இயக்கம்பிரபாகரன்
தயாரிப்புசசிகுமார்
கதைபிரபாகரன்
இசைஎன் ஆர் ரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுபிரேம் குமார்
கலையகம்கம்பெனி புரடக்சன்
வெளியீடுசெப்டம்பர் 2012
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுந்தர பாண்டியன் 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி போன்றோர் நடித்துள்ளார்கள்.

கதை சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தன் நண்பன் அன்பு (இனிகோ பிரபாகரன்) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய்க் காதலித்து வரும் அர்ச்சனாவுடன்( லட்சுமி மேனன் ) அவரைச் சேர்த்து வைக்க முயல்கிறார் கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சுந்தரபாண்டியன் (சசிகுமார்). அர்ச்சனாவை சுந்திரபாண்டியனின் நண்பனின் நண்பனும் ஒரு தலையாகக் காதலிக்கிறான். நண்பனின் காதலை அர்ச்சனாவுக்குச் சொல்லப்போகும் சுந்தரபாண்டியனிடம் தான் அவரைத்தான் காதலிப்பதாக அர்ச்சனா சொல்கிறார். அதை அவரும் அவர் நண்பரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நண்பனின் நண்பன் (அப்புக்குட்டி) ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர்களுக்குள் நடந்த சண்டையில் அவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறார். அப்பழி சுந்தரபாண்டியன் மேல் விழுந்து அவர் சிறை செல்ல நேருகிறது. காதல் செய்தி பெண் வீட்டாருக்குத் தெரிந்துவிட அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன்பிறகு வரும் பிணக்குகளும் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பதை சொல்லியிருக்கிறார், இயக்குனர்.

பாடல்கள்

பாட்டு பாடலாசிரியர் பாடியவர்
கொண்டாடும் மனசு மோகன் ராஜன் ஆனந்த் அரவிந்த்தக்சன்
ரக்கை முளைத்ததேன் கார்க்கி ஜி. வி. பிரசாத், சிரேயா கோசல்
நெஞ்சுக்குள்ளே தாமரை சைதன்வி
காதல் வந்தது நா. முத்துக்குமார் அரிச்சரண்

வெளி இணைப்புகள்