சிவப்பிரகாச உரை
Jump to navigation
Jump to search
சிவப்பிரகாச உரை என்பது சிவப்பிரகாசம் என்னும் நூலுக்குத் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல்.
- உரை எழுதப்பட்ட ஆண்டு கி. பி. 1488 (சக ஆண்டு 1410)
- இது ஒரு விரிவுரை [1] போல அமைந்துள்ளது.
- உரைக் கருத்துகளுக்குப் பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள்களை இவ்வுரை தந்துள்ளது.
- அசிந்திதம் முதலான சிவாகமங்கள், சூத சங்கிதை, சதரத்தின சங்கிரகம் முதலான வடமொழி நூல்களிலிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
- சில தமிழ் நூல்களை இவர் வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்.
- திருக்கோவையாரைக் ‘கோவைத் திருவாசகம்’ என்கிறார்.
- நக்கீரர் அந்தாதியைக் ‘காளத்தி அந்தாதி’ என்கிறார்.
- சைவர்களிடையே அதிகம் பயிலப்படாத சிவானந்த மாலை, தத்துவ விளக்கம், பிராசாத அகவல், உரூப சொரூப அகவல் முதலான நூல்களிலிருந்து இவர் மேற்கோள் தருகிறார்.
- திருக்குறளை இவர் திருவருட்பயன் என்றே குறிப்பிடுகிறார்.
- சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்தில் காடப்படாத சிற்றம்பல நாடி ஞானப்பஃறொடை என்னும் நூலிலிருந்து மேற்கோள் தருகிறார்.
- இவரது மாணாக்கர் ‘மெய்ப்பாத புராணிகர்’ கி. பி. 1709-ல் திருப்பைஞ்ஞீலிப் புராணம் என்னும் நூலை 821 செய்யுள்களால் இயற்றியுள்ளார்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ விருத்தி, பாடியம், பாஷ்யம்