சிவபூசா பத்ததி
Jump to navigation
Jump to search
சிவபூசா பத்ததி என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது பத்ததி வழிபாட்டு முறைகளைக் கூறும் நூல்.
ஆலயபூசை பற்றிச் சைவசித்தாந்தம் குறிப்பிடுவதில்லை. சிவ-வழிபாட்டையே போற்றுகிறது. சிவ-வழிபாட்டில் புத்திர-மார்க்கம், கிரியா-மார்க்கம் என இரண்டு வகை உண்டு. இந்த இரண்டையும் விளக்கும் பாடல் ஒன்று இந்த நூலில் உள்ளது. [1] புத்தி மார்க்கம் புகலில் புதிய விரைப் போது
- புகை ஒளி மஞ்சனம் அமுது முதற்கொண்டு ஐந்து
சுத்தி செய்து ஆசனம் மூர்த்தி மூர்த்திமான் ஆம்
- சோதியையும் பாவித்து ஆவாகித்துச் சுத்த
பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப்
- பரிவினொடும் எருயில் வரு காரியமும் பண்ணி
நித்தலும் இக் கிரியையினை இயற்றுவோர்கள்
- நின்மதன் தன் அருகு இருப்பர் நினையுங்காலே
இது ஆகம பூசை எனப்படும்.
பூசாவிதிகளைக் கூறும் நூல்கள்
- பெரியபுராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் அம்மை காஞ்சி நகரில் பெருமானைப் பூசித்த பாங்கைச் சொல்லுமிடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
- தத்துவப் பிரகாசம் என்னும் தனி நூல்.
- குருஞான சம்பந்தர் செய்தார் எனக் கூறப்படும் உரைநடையில் உள்ள ‘பூசாவிதி’.
துவார பூசையில் தொடங்கி அட்ட-பூசை வரை பல பூசனைப் பாங்குகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ பாடல் பொருள் விளங்கும் வகையில் சொற்பிரிப்பு செய்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.