சிவதருமோத்தர உரை
Jump to navigation
Jump to search
சிவதருமோத்தர உரை என்னும் உரைநூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் 16 ஆம் நூற்றாண்டில் மறைஞான தேசிகரால் எழுதப்பட்டது. சிவதருமோத்தரம் என்னும் நூல் மறைஞான சம்பந்தர் என்னும் சைவப் பெரியாரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று. அகத்தியர் வினாக்களுக்கு முருகக்கடவுள் சொல்லும் விடைகளைக் கூறுவது இந்த நூல். சிவதருமோத்தர உரையானது, தனது ஆசாரியர் நூலுக்கு மாணாக்கரால் எழுதப்பட்ட உரை.
இது உரைநூல் என்றாலும் இதில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள பாடல்கள் பல தொகைக்குறிப்புகளுக்கு விளக்கம் தருவனவாக உள்ளன.
- அட்டாங்க சித்தி மேற்கோள் பாடல்.
- மறையோர் தேஎத்து மன்றல் எட்டுக்கு மேற்கோள் பாடல்
- துக்கத்திரயங்கள் யாவை என விளக்கும் மேற்கோள் பாடல்
- தமிழில் வீட்டுநெறி சொல்லலாமா என்பதை விளக்கும் பாடல்
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005