சிறீதர் |
---|
பிறப்பு | சென்னை, இந்தியா |
---|
தேசியம் | இந்தியர் |
---|
பணி | நடன அமைப்பாளர், தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி நடுவர், நடிகர், இயக்குநர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்போது வரை |
---|
சிறீதர் (Sridhar (choreographer)) என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார். இவர் இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு நடிகராக பொய் (2006) படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் திரைப்பட பாடல்களில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளார்.
தொழில்
கே. பாலச்சந்தரின் பொய் (2006) திரைப்படத்தில் சிறீதர் முழுமையான நடிகராக அறிமுகமானார். அப்பட்டதில் இவர் ஒரு துணை வேடத்தில் தோன்றினார்.[1] காதலில் விழுந்தேன் (2008) படத்தில் "நாக்க முக்கா " பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். பிலபலமான பாடலான இதை திரையில் நன்றாக காட்டுவதை உறுதி செய்யும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக சிறீதர் "அதற்கு சில அதிரடியான நடன அசைவுகளைக் கொடுத்தார்.[2] சிறீதர் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் (2011) படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியதற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். அப்படத்தில் இவர் நான்கு பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தார்.[3] நாதஸ்வரம் என்ற தொலைக்காட்சி தொடரின் தலைப்பு பாடலிலும் நடனமாடினார்.
2015 ஆம் ஆண்டில், ராகவ் மாதேஷ் இயக்கிய போக்கிரி மன்னன் என்ற அதிரடி நாடகப்படத்தில் முன்னணி நடிகராக முதல் முறையாக நடித்தார். சிறிய அளவு விளம்பரத்துடன் வெளியான இப்படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4] நவ்ரன்னிங்.காம் இதை ஒரு "சாதாரண படம்" என்றும் "திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் சித்தரவதையானது" என்றும் குறிப்பிட்டது, சிறீதர் "கடந்து செல்லக்கூடிய அறிமுகம்" என்றும் குறிப்பிட்டது.[5][6]
இவர் 2016 ஆம் ஆண்டில், சவாடி படத்திற்கு இயக்குநரானார்.[7]
திரைப்படவியல்
- குறிப்பில் குறிப்பிடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
நடன இயக்குனர்
- படங்கள்
- தொலைக்காட்சி
ஆண்டு
|
தொடர்
|
மொழி
|
2000
|
மணிகூண்டு
|
தமிழ்
|
2010
|
நாதஸ்வரம்
|
தமிழ்
|
இயக்குனர்
ஆண்டு
|
படம்
|
குறிப்புகள்
|
2018
|
சவாடி
|
|
நடிகர்
- படங்கள்
ஆண்டு
|
படம்
|
பாத்திரம்
|
குறிப்புகள்
|
2000
|
டபுள்ஸ்
|
பிரபுவின் நண்பர்
|
|
2002
|
யுனிவர்சிடி
|
சிறீதர்
|
|
2003
|
சூரி
|
அவராகவே
|
"பிரிவெல்லாம்" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2004
|
வர்ணஜாலம்
|
அவராகவே
|
"மாதா மாதா" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2004
|
மதுர
|
அவரே
|
"மச்சன் பேரு" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2004
|
காதல்
|
அவராகவே
|
"புரா கூண்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்
|
2005
|
டிசம்பர்
|
|
மலையாள படம்; "டம் டுமா" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2006
|
கோடம்பாக்கம்
|
அவராகவே
|
"ஓ பப்பா" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2006
|
பொய்
|
ரோஷன்
|
|
2007
|
புலி வருது
|
அவராகவே
|
"தேரு வருது" பாடலில் சிறப்புத் தோற்றம்
|
2007
|
வேகம்
|
|
|
2008
|
காதலில் விழுந்தேன்
|
அவராகவே
|
"நக்க முக்கா" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2010
|
அம்பாசமுத்திரம் அம்பானி
|
அவரே
|
"பூ பூக்கும் தருணம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
|
2011
|
புலிவேசம்
|
அவரே
|
"டாப் கிளாஸ்" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2013
|
தலைவா
|
அவரே
|
"தமிழ் பசங்க" பாடலில் சிறப்புத் தோற்றம்
|
2013
|
சந்தமாமா
|
அவராகவே
|
"நாராயணா நாராயணா" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2013
|
ரகளபுரம்
|
அவரே
|
"ஒபாமாவும்" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2014
|
ஜில்லா
|
அவராகவே
|
"எப்ப மாமா ட்ரீட்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்
|
2015
|
போக்கிரி மன்னன்
|
|
|
2015
|
10 எண்றதுக்குள்ள
|
அவராகவே
|
"வ்ரூம் வ்ரூம்" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2016
|
நட்பதிகாரம் 79
|
அவரே
|
"செல்லம்மா" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2017
|
சக்க போடு போடு ராஜா
|
அவரே
|
"கலக்கு மச்சான்" பாடலில் சிறப்புத் தோற்றம்
|
2018
|
கோலிசோடா 2
|
அவரே
|
"பொண்டாட்டி" பாடலில் சிறப்பு தோற்றம்
|
2018
|
ஜுங்கா
|
அவரே
|
"அம்மா மேல சத்தியம்" பாடலில் சிறப்பு தோற்றம்
|
- தொலைக்காட்சி
ஆண்டு
|
படம்
|
பாத்திரம்
|
மொழி
|
2005
|
ராஜ ராஜேஸ்வரி
|
"சாகலகலா வள்ளியே" என்ற தலைப்பு பாடலில் சிறப்புத் தோற்றம்
|
தமிழ்
|
2010
|
நாதஸ்வரம்
|
"நாதஸ்வரம்" என்ற தலைப்பு பாடலில் சிறப்புத் தோற்றம்
|
தமிழ்
|
நடனமாடுபவர்
குறிப்புகள்