சினேகன்
Jump to navigation
Jump to search
சினேகன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கவிஞர் சினேகன் |
---|---|
பிறந்ததிகதி | சூன் 23, 1978 |
பிறந்தஇடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல்கட்சி | மக்கள் நீதி மய்யம் |
துணைவர் | கன்னிகா ரவி |
சினேகன் (Snehan) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.[1][2].2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.[3] விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு 6 மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.
திரைப்படப் பட்டியல்
- புத்தம் புது பூவே (1997)
- பாண்டவர் பூமி (2001)
- சார்லி சாப்ளின் (2002)
- மௌனம் பேசியதே (2002)
- ஏப்ரல் மாதத்தில் (2002)
- பகவதி (2002)
- சாமி (2003)
- கோவில் (2003)
- புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2004)
- போஸ் (2004)
- ஆட்டோகிராஃப் (2004)
- பேரழகன் (2004)
- மன்மதன் (2004)
- ராம் (2005)
- குண்டக்க மண்டக்க (2005)
- அகரம் (2007)
- பருத்திவீரன் (2007)
- சக்கர வியூகம் (2008)
- ஏகன் (2008)
- யோகி (2009)
- படிக்காதவன் (2009)
- முத்திரை (2009)
- ஆடுகளம் (2011)
- பதினாறு (2011)
- மாப்பிள்ளை (2011)
- காதல் 2 கல்யாணம் (2011)
- கழுகு (2012)
- சத்ரியன் (2017)
நடித்த திரைப்படங்கள்
- யோகி (2009)
- உயர்திரு 420 (2011)
- ராஜராஜ சோழனனின் போர்வாள் (2016)
- பூமிவீரன் (2016)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2008 தீபங்கள்
- 2008 தெக்கத்திப் பொண்ணு
- 2014 உயிர்மெய்
- 2017 "பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர்"-தமிழ்
புத்தகங்கள்
- முதல் அத்தியாயம்
- இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்
- இப்படியும் இருக்கலாம்
- புத்தகம்
- அவரவர் வாழ்க்கையில்
இயற்றிய சில பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடல்கள் |
---|---|---|---|
2001 | பாண்டவர் பூமி | பரத்வாஜ் | அவரவர் வாழ்க்கையில் |
2001 | பாண்டவர் பூமி | பரத்வாஜ் | தோழா தோழா |
2002 | ஏப்ரல் மாதத்தில் | யுவன் சங்கர் ராஜா | பொய் சொல்ல |
2002 | மௌனம் பேசியதே | யுவன் சங்கர் ராஜா | ஆடாத ஆட்டமெல்லாம் |
2003 | சாமி | கல்யாணந்தான் கட்டிக்கிட்டு | |
2004 | போஸ் | பொம்மலாட்டம் | |
2004 | ஆட்டோகிராப் | பரத்வாஜ் | ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா |
2004 | பேரழகன் | யுவன் சங்கர் ராஜா | ஒரே ஒரு பிறவி |
2004 | மன்மதன் | யுவன் சங்கர் ராஜா | மன்மதனே நீ கலைஞனா |
2005 | தவமாய் தவமிருந்து | சபேஷ் முரளி | ஒரே ஒரு ஊருக்குள்ளே |
2005 | ராம் | யுவன் சங்கர் ராஜா | பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது |
2007 | போக்கிரி | மாம்பழமாம் மாம்பழம் | |
2007 | பள்ளிக்கூடம் | மீண்டும் பள்ளிக்கு போகலாம் | |
2007 | பருத்தி வீரன் | யுவன் சங்கர் ராஜா | அனைத்து பாடல்களும் |
2008 | ஏகன் | யுவன் சங்கர் ராஜா | ஓடும் வரையில், ஹே சாலா |
2009 | வில்லு | தேவி ஸ்ரீபிரசாத் | தீம்தனக்கு தில்லானா |
2009 | யோகி | யுவன் சங்கர் ராஜா | அனைத்து பாடல்களும் |
2009 | படிக்காதவன் | அப்பா அம்மா விளையாட்ட | |
2011 | ஆடுகளம் | ஜி வி பிரகாஷ்குமார் | அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி |
2011 | மாப்பிள்ளை | ரெடி ரெடியா ரெடியா | |
2012 | கழுகு | யுவன் சங்கர் ராஜா | ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் |
தேர்தலில் பெற்ற வாக்குகள்
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவுகள் | பெற்ற வாக்குகள் | வாக்கு % | |
---|---|---|---|---|---|---|---|
2019 | 17வது மக்களவை | மக்கள் நீதி மய்யம் | சிவகங்கை | 5 ஆவது இடம் | 22,951 | 2.1 | |
2021 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | மக்கள் நீதி மய்யம் | விருகம்பாக்கம் | 3 ஆம் இடம் | 16,939[4] | 10.11 |
மேற்கோள்கள்
- ↑ "சினேகன் பாடலாசரியர்". https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html.
- ↑ "Lyricist Snehan". http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html.
- ↑ "'சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு". https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/snehan-continuing-setback-in-virugambakkam/tamil-nadu20210502144246933.
- ↑ TimesNow. "Tamil Nadu Makkal Needhi Maiam Election Results 2021 - Tamil Nadu Makkal Needhi Maiam Election Results" (in en). https://www.timesnownews.com/elections/tamil-nadu-makkal-needhi-maiam.