சித்ரா ஐயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்ரா ஐயர்
Dirctor Lenin Rajendran with the cast of Malayalam film Ratri Mazha of Indian Panaorama at presentation on 24.11.2007 at Panji Goa.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புகருநாகப்பள்ளி, கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை
இசைத்துறையில்2000முதல் தற்போது வரை

சித்ரா ஐயர் (Chitra Iyer) எனக் குறிப்பிடப்படும் சித்ரா சிவராமன் ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். பெங்களூருவில் வசித்துவந்த சித்ரா, தமிழ் திரைப்படங்களில் 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பரவலாகப் பணியாற்றி வந்தார், அதே நேரத்தில் மலையாள தொலைக்காட்சியில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் நடிகையாகவும் பணியாற்றினார்.[1][2]

தொழில்

சித்ரா ஐயர், தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றும் முயற்சியை மேற்கொண்டார், ஆனால் பெங்களூரில் இருந்து சென்னை வருவது கடினமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டில், ஏ. ஆர். ரகுமான், சித்ராவுடன் தொடர்பு கொண்டு, அவரது பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுகளுடன் சென்னைக்கு வருமாறு பணித்தார். அதனால் சித்ரா சென்னைக்கு வந்து, தனது தொடர்ச்சியான தமிழ் மற்றும் மலையாள பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை ரகுமானிடம் கொடுத்தார்.[3] சித்ரா சென்னை வந்த அதே நாளில், ஏ. ஆர். ரகுமான் உடனடியாக பாடல்களை கேட்டு தெனாலி படத்தில் வரும் "அத்தினி சித்தினி" எனும் பாடலைப் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். பின்னர் சித்ரா சிவராமன் என்கிற பெயரில், தனது திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் ராஜா , யுவன் ஷங்கர் ராஜா , பரத்வாஜ் மற்றும் வித்யாசாகர் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் பிற இசையமைப்பாளர்களுக்காக தொடர்ந்து பணியாற்றினார். மேலும், சித்ரா, தனது தாய் மொழி தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களுக்கு பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார்.[3]

சொந்த வாழ்க்கை

சித்ரா ஐயர் முன்னாள் விமானப்படை விமானி வினோத் சிவராமன் என்பவரை 1989 ஜூலை 12 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும், 1989 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை ஜிம்ஹானா கிளப்பில் தங்களுடைய பெற்றோர்களின் வலியுறுத்தல் காரணமாக சந்தித்துக் கொண்டனர். இவர்களுக்கு அதிதி மற்றும் அஞ்சலி என இரண்டு மகள்கள் உண்டு.[4] அண்மை ஆண்டுகளில், அவரது தொலைக்காட்சி பணிகளினூடே, சித்ரா கேரளாவில் யானை நலன்புரி சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலராகப் பணியாற்றினார்.[5] அவரது தாயார் ரோகினி ஐயர் மேற்கொண்ட ஒரு திட்டத்தை ஆதரித்து மாநிலத்தில் விவசாயத்தை ஊக்குவித்தார்.[6] இதேபோல், 2013 ஆம் ஆண்டில் அவர் தனது மகள்களான அதிதி மற்றும் அஞ்சலி சிவராமன் ஆகியோருடன் இணைந்து ஒரு மென்பொருள் நிறுவனமான டார்க்ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.[7]

குறிப்புகள்

  1. "Find a track - Asian Network - BBC Music". https://www.bbc.co.uk/music/tracks/find/asiannetwork.2017/09/17/2PM. பார்த்த நாள்: 2017-11-02. 
  2. "The Tribune, Chandigarh, India - Chandigarh Stories". http://www.tribuneindia.com/2005/20050411/cth2.htm. பார்த்த நாள்: 2017-11-02. 
  3. 3.0 3.1 "The Hindu : When fortune met talent..." இம் மூலத்தில் இருந்து 2004-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041120111121/http://www.thehindu.com/thehindu/fr/2004/01/02/stories/2004010201401400.htm. பார்த்த நாள்: 2017-11-02. 
  4. "shevlin's world: July 2013". https://shevlinsebastian.blogspot.co.uk/2013/07/. பார்த்த நாள்: 2017-11-02. 
  5. "Society for Elephant Welfare" இம் மூலத்தில் இருந்து 2017-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170808073947/http://www.sew-india.org/about-us.php. பார்த்த நாள்: 2017-11-02. 
  6. "Mathrubhumi: ReadMore -'Rohini Iyer earns income through varied farming'" இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107003749/http://www.mathrubhumi.com/tv/ReadMore/9719/rohini-ayyar-agri/E. பார்த்த நாள்: 2017-11-02. 
  7. "DARKHORSE PRODUCTIONS PRIVATE LIMITED". https://www.indiancompany.info/company/darkhorse-productions-private-limited/. பார்த்த நாள்: 2017-11-02. 
"https://tamilar.wiki/index.php?title=சித்ரா_ஐயர்&oldid=8860" இருந்து மீள்விக்கப்பட்டது