சித்தர் பாடல்கள்
Jump to navigation
Jump to search
சித்தர்களால் இயற்றப்பெற்ற பாடல்கள் சித்தர் பாடல்கள் ஆகும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- வேதியியல், மருத்துவம், வானியல் போன்ற துறைசார் தகவல்கள் அடங்கிய பாடல்கள்.
- சமூக சீர்சிருத்த கருத்துக்கள் தாங்கிய பாடல்கள்.
- ஆன்மீகப் பாடல்கள்.
எடுத்துக்காட்டுகள்
அழுகணிச் சித்தர் பாடல்கள்
முதன்மைக் கட்டுரை: அழுகணிச் சித்தர் பாடல்
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா! குடியோடிப் போகானோ! 7 ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ! 8
கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு [1] பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம்
முதன்மைக் கட்டுரை: கடுவெளிச் சித்தர் பாடல்கள்
நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
குதம்பைச் சித்தர் பாடல்கள் [2] பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம்
முதன்மைக் கட்டுரை: குதம்பைச் சித்தர் பாடல்கள்
காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி ? 26 வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய் உண்காயம் ஏதுக்கடி ? 27 மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28 பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி ? 29 தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி ? 30 தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி ? 31 பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி ? 32