சிகரக் கோபுரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிகரக் கோபுரம் மற்றும் சுற்றுலா பயணிகள்
சிகரக் கோபுரத்தின் பக்கவாட்டிலானக் காட்சி

சிகரக் கோபுரம் (Peak Tower) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் உல்லாசப் பயணிகளையும் கவரும் ஒரு இடமாகும். இந்தக் கோபுரம் கடல் மட்டத்தில் இருந்து 396 மீட்டர்கள் உயரத்திலும், அதேவேளை விக்டோரியா சிகரத்தில் இருந்து 156 மீட்டர்கள் கீழும் ஒரு முனையில், ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கை நோக்கி கட்டப்பட்டுள்ளது. இந்த சிகரக் கோபுரத்தின் வான்மாடியில் இருந்து பார்த்தால், விக்டோரியா சிகரத்தின் இயற்கை பசுமை அழகையும், கீழே பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான வானளாவிகளின் செயற்கை அழகையும் ஒரு சேரக் காணலாம். அதுவும் இரவு நேரக் காட்சி காண்போரைக் கொள்ளைக்கொள்ள வைப்பதாகும். இந்தக் கோபுரம் சிறப்பாக ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கென்றே கட்டப்பட்ட ஒரு அழகியக் கட்டமாகும். அத்துடன் இந்தக் கோபுரத்திற்குச் செல்வதற்கென சிறப்பு சிகர டிராம் வண்டி சேவை ஒன்றும் உள்ளது. அது செங்குத்தாகச் செல்லும் கம்பித்தடம் டிராம் வண்டிச்சேவை வகையைச் சேர்ந்ததாகும். இந்தச் சிகரக் கோபுரத்திற்கான பயணத்தை மேற்கொள்வோர், அநேகமாக "சிகர டிராம் வண்டி" பயணத்தின் ஊடாகவே செல்வர். எனவே இந்த இரண்டு விடயங்களும் ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவையாகும். அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வேறு பல விடயங்களும் இந்தச் சிகரக் கோபுரத்தின் உள்ளே உள்ளது.

உரிமை

இந்த சிகரக் கோபுரம் மற்றும் சிகர டிராம் வண்டி சேவை இரண்டிற்குமான உரிமை ஹொங்கொங் மற்றும் சங்காய் உல்லாசகக் குழுமத்தினர் ஆகும். இந்த இரண்டுக்குமான பொதுப் பெயராக "The Peak" என்று அழைக்கப்படுகின்றது.[1][2]

வரலாறு

1881களில் அலெக்சாண்டர் பைண்ட்லே இசுமித் என்பவருக்கு, தற்போது சிகரக் கோபுரம் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் "சிகர உல்லாசகம்" என ஒரு உல்லாசகம் இருந்தது. இவரே கம்பித் தடங்களில் செங்குத்தாகச் செல்லும் டிராம் இரயில் வண்டி சேவையை ஹொங்கொங்கில் அறிமுகப்படுத்தியவராவார்.[3] அக்காலகட்டத்தில் இந்த டிராம் இரயில் வண்டி பாதை மற்றும் நிறுத்தகத்தை கட்டி முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்துள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருள்களையும் இயந்திர உதவிகள் இன்றி, தொழிலாளர்களின் கடினமான உடல் உழைப்பின் ஊடாகவே மேலே எடுத்து வரப்பட்டுள்ளன. அவ்வாறு கட்டப்பட்ட முதல் நிறுத்தகம் மரப்பலகைகளினால் ஆனதாகும்.[3] The Peak Tram was opened for public service on 28 May 1888 by the then Governor Sir George William des Voeux.[3] அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டுகளில்

மேற்கோள்கள்

  1. "The Hongkong and Shanghai Hotels - Peak Tower". The Hongkong and Shanghai Hotels, Limited இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070420092155/http://www.hshgroup.com/commercialDetails.asp?rtid=72&id=24&cid=120. பார்த்த நாள்: 13 March 2007. 
  2. "The Peak". The Peak இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070306011935/http://www.thepeak.com.hk/full/en/index.php. பார்த்த நாள்: 13 March 2007. 
  3. 3.0 3.1 3.2 Eric Cavaliero, Grand old lady to turn 110, 24 July 1997

வெளியிணைப்புகள்

Regional Emblem of Hong Kong.svg.png ஒங்கொங்:விக்கிவாசல்
"https://tamilar.wiki/index.php?title=சிகரக்_கோபுரம்&oldid=28807" இருந்து மீள்விக்கப்பட்டது