சி. அருளம்பலம்
சி. அருளம்பலம் C. Arulampalam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for நல்லூர் | |
பதவியில் 1970–1977 | |
முன்னையவர் | இ. மு. வி. நாகநாதன் |
பின்னவர் | மு. சிவசிதம்பரம் |
குழுக்களுக்கான பிரதித் தலைவர் | |
பதவியில் 23 சூலை 1976 – 18 மே 1977 | |
முன்னையவர் | சேனபால சமரசேகர |
பின்னவர் | சி. ஆர். பெலிகம்மன |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 பெப்ரவரி 1909 |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
இனம் | இலங்கைத் தமிழர் |
சின்னையா அருளம்பலம் (Chinnaiah Arulampalam, 18 பெப்ரவரி 1909 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
அரசியலில்
அருளம்பலம் 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 2ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் கு. வன்னியசிங்கத்திடம் தோற்றார்.[2] பின்னர் 1956 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்றார்.[3]
அருளம்பலம் நல்லூர் தொகுதியில் மார்ச் 1960,[4] சூலை 1960[5] மற்றும் 1965[6] தேர்தல்களில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இ. மு. வி. நாகநாதனிடம் தோற்றார். அவர் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாகநாதனை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[7] அவர் பின்னர் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கு கட்சி மாறினார். இதன் பயனாக அவருக்கு 1975 ஆம் ஆண்டில் குழுப் பிரதித் தலைவர் பதவி கிடைத்தது..[8]
1977 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்டு 1,042 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.[9]
மேற்கோள்கள்
- ↑ "Arulampalam, Chinnaiah". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2067.
- ↑ "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150712194326/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Deputy Chairman of Committees". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/deputy-chairman-of-committees.
- ↑ "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF.